Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
நீரின் மூலம் பரவும் நோய்கள்!
[Friday 2025-03-14 17:00]

பொதுவாக இந்த உலகம் நீர் இன்று அமையாது என்று தான் கூற வேண்டும். நீர் இல்லாமல் எந்தவொரு உயிரினமும் வாழமுடியாத ஒன்றாகும். அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் தண்ணீரை சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அசுத்தமான தண்ணீரை நாம் பருகுவதால் பல நோய்கள் மிகவும் எளிதாக தாக்குகின்றது. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் நீரின் மூலம் மிகவும் எளிதாக பரவுகின்றது.

நாம் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தும் தண்ணீர் அசுத்தமாக இருந்தால் எளிதில் நோய்தொற்றுக்கு ஆளாகிவிடுவோம். அசுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், சமைப்பதாலும் தொற்று நோயின் தாக்கம் ஏற்படும். இத்தகைய தொற்று வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளால் ஏற்படலாம். இத்தகைய அசுத்தமான மூலங்களுடன் தொடர்புகொள்வது பல்வேறு நீர்வழி நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் பரவுகிறது.

நீர்வழி நோய்கள்

நீர் வழியாக பல்வேறு நோய்கள் உள்ளது. அதாவது நோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியைப் பொறுத்து மாறுபடும். ஆதலால் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு அல்லது டைபாய்டு காய்ச்சல் என்பது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் பொதுவான நீர்வழி நோய்களில் ஒன்றாகும்.

சுத்தமான மற்றும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

டைபாய்டு மிகவும் தொற்றுநோயானது மற்றும் பாதிக்கப்பட்ட நபரால் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவலாக பரவுகிறது.

ஆனால் சுகாதார நடவடிக்கையினை எடுப்பதன் மூலமும், தேவையான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.

காலரா

நீரின் மூலம் பரவும் நோய்களில் காலராவும் ஒன்றாகும். இது பொதுவாக கிராமப்புற சமூகங்களில் ஏற்படுகிறது.

அதாவது கிராமப் புறங்களில் மக்கள் சரியான சுகாதாரத்தினை மேற்கொள்ளாததால் அதிகமாக வருகின்றது. தீங்கு விளைவிக்கும் இந்த நோய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தையும் ஏற்படுத்தும்.

காலரா மாசுபட்ட தண்ணீரால் பரவுவதுடன், இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு காரணமாகிறது, குறிப்பாக மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் மற்றும் திறந்த நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றது.

அதாவது சுத்தமாக இருத்தல், கைகளை நன்றாக கழுவுதல், குளித்தல் போன்றவற்றினை சரியாக செய்வதுடன், சுத்தமான தண்ணீரை பருகுவதாலும் இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் சில நாட்களுக்குள் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வயிற்றுப்போக்கு

நீர் வழியாக பரவும் மற்றொரு நோய் வயிற்றுப்போக்காகும். இவை ஷிகெல்லா பாக்டீரியா அல்லது அமீபாவால் ஏற்படுகின்றது.

அதாவது அசுத்தமான உணவு மற்றும் பானங்கள் மூலமாகவும், சரியான சுகாதாரம் இல்லாத இடத்தின் மூலமாகவும் பரவுகின்றது.

வயிற்றுப்போக்கு தொற்று குடல் அழற்சி மற்றும் வயிற்றுப்போக்கு இரத்தத்துடன் கலந்து, கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளால் மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் நீரால் அல்லது மனித மலத்துடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் பரவுகிறது.

ஹெபடைடிஸ் ஏ

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் நோயாகும், இது அதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

ஹெபடைடிஸ், குறிப்பாக ஹெபடைடிஸ் ஏ நீர் மூலம் பரவும் நோய், அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பதன் மூலமோ பரவுகின்றது.

முறையற்ற சுகாதாரம் இல்லாத இடங்களில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ நோய்த்தொற்று சில வாரங்களில் சரியாகிவிடும்,

ஆனால் அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கலாம் அல்லது காலப்போக்கில் மோசமடையவும் செய்யலாம்.

ஜியார்டியா

நீர் மூலம் பரவும் நோய்களில் மிகவும் அரிதாக இருப்பது ஜியாரடியா என்பதாகும். இவை அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவின் மூலமாக பரவுகின்றது.

ஜியார்டியா என்பது ஜியார்டியா ஒட்டுண்ணியால் ஏற்படும் செரிமான கோளாறு ஆகும். சில வாரங்களில் தொற்று தானாகவே போய்விடும் என்றாலும், குடலில் ஏற்படும் விளைவுகள் நீண்ட காலத்திற்கு கூட நீடிக்குமாம்.

காலராவைப் போலவே, குளங்கள் மற்றும் ஓடைகள் போன்ற மாசுபட்ட திறந்த நீர் நிலைகள் மூலமாக பரவுகின்றது. நகரங்களில் நீச்சல் குளங்கள் போன்றவற்றிலிருந்து பரவுகின்றது.

மேலே கூறப்பட்ட நோய்கள் மட்டுமின்றி, ஒட்டுண்ணி, நோய்க்கிருமியால் நீர் வழி நோய்களாக அமீபிக் வயிற்றுப்போக்கு, அமீபியாசிஸ் மற்றும் ஷிகெல்லோசிஸ் ஆகியவையும் காணப்படுகின்றது.

காரணங்கள் என்ன?

நீர்வழி நோய்கள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படுகின்றன.

மாசுபட்ட நீர் நிலைகள் அல்லது மலம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு, உணவு மற்றும் பானங்களைக் கையாளும் போது சரியான சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் பரவுகின்றன.

மேலும் பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் பரவுகின்றது.

முறையான சுகாதாரத்தை கடைபிடிக்காததே தண்ணீரால் பரவும் நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணம்.

நோய்களின் அறிகுறிகள்

டைபாய்டு: தசை வலி மற்றும் பலவீனத்துடன் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி

காலரா: நீரிழப்புக்கு வழிவகுக்கும், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தசைப்பிடிப்பு, நிலையான சோர்வு

வயிற்றுக் கடுப்பு: காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, மலம் வழியாக இரத்தம் வெளியேறும், வயிற்றுப்போக்கு, கடுமையான நீரிழப்பு, வயிற்று தசைப்பிடிப்பு மற்றும் வலி

ஹெபடைடிஸ் ஏ: மஞ்சள் காமாலை, திடீரென அதிக காய்ச்சல், ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள், களைப்பு, வயிற்று வலி, பசியின்மை ,எடை இழப்பு

ஜியார்டியா: வயிற்றுப்போக்கு, வீக்கம், குமட்டல், தொடர்ந்து வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலி, எடை இழப்பு

சிகிச்சை

நீரினால் பரவும் நோய்களுக்கு பொதுவாக சிகிச்சை என்னவெனில், வயிற்றுப் போக்கினால் இழந்த திரவங்களை, குளுக்கோஸ் வழியாக உடம்பில் செலுத்தில் நீரேற்றத்தினை உறுதி செய்வது.

பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

போதுமான ஓய்வு எடுப்பதும் சோர்வைத் தவிர்ப்பதும் முக்கியம்.

நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது?

ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

வெளியில் இருந்து வாங்கிவரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவ வேண்டும். முடிந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது சிறந்தது.

ஹெபடைடிஸ் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை தடுப்பதற்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழாய்களிலிருந்து நேரடியாக வரும் தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும். குறித்த தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து குடிப்பது சிறந்தது.

சமைக்கப்படாத காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றிலும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருப்பதால் நேரடியாக உடம்பில் சென்று தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைப்பதுடன், சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா