Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அம்மா கை பக்குவத்தில் குடல் கறி வைக்கத் தெரியுமா?
[Monday 2025-06-09 18:00]

தற்போது இருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதிலுள்ள ஏகப்பட்ட சத்துக்கள் உடலுக்குள் சென்று அதிக எடை பிரச்சினை, இதய சார்ந்த நோய்கள், மலச்சிக்கல், கொலஸ்ட்ரோல் பிரச்சினைகள் என்பவற்றை ஏற்படுத்துகிறது. இப்படி இருந்தாலும் அசைவ உணவு பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அவர்களின் சுவை உணர்வும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

ஒரே சுவையில் தினமும் சாப்பிடுவதை விட தினமும் ஒவ்வொரு சுவையில் சாப்பிடுவதை தான் விரும்புகிறார்கள். மட்டன் குழம்பு வகைகளில் குடல் கறி உடலுக்கு ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது. அதனை ஒரே சுவையில் தினமும் செய்யாமல் வேறு வித்தியாசமான சுவையில் முயற்சித்தால் வீட்டிலுள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில், காரசாரமான குடல் கறி எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்குடல் – ½ கிலோ

வெங்காயம் – 2 (நறுக்கி வைக்கவும்)

தக்காளி – 2 (நறுக்கி வைக்கவும்)

இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் – 1½ மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி

மல்லி தூள் – 2 மேசைக்கரண்டி

மிளகு – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

சோம்பு – ½ மேசைக்கரண்டி

கறி மசாலா / குடல் மசாலா – 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

குடல் கறி வைப்பது எப்படி?

முதலில் தேவையான அளவு குடலை எடுத்து, வெந்நீரில் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.

அதன் பின்னர், சுத்தம் செய்த குடலை குக்கரில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 4 விசில் வரை வேக விட்டு, ஒரு பக்கமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் மூன்றையும் போட்டு வாசம் வரும் வரை வதங்கவிடவும். வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள், மிளகாய், மல்லி, கறி மசாலா ஆகிய பொருட்களை போட வேண்டும்.

அதனை கிளறி விட்டு வேக வைத்த குடலை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். தேவையிருந்தால் புளிக்கரைச்சல் ஊற்றலாம்.

கடைசியாக காரத்திற்காக மிளகுத்தூள் சேர்க்கலாம். அத்துடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் அம்மா கை பக்குவத்தில் சுவையான குடல் கறி தயார்!

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா