Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்?
[Tuesday 2025-06-10 17:00]

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதனை பதிவில் பார்க்கலாம். தென்னிந்தியாவில் பலரும் தேங்காய் எண்ணெய் தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏனெனின் இதில், அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிஜனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதனால் 24°செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

அழகு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட சத்துக்கள் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது.

அதே போன்று உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது. இதனால் தினமும் சாப்பிட்டு வந்தாலும் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய பலன்களை தன்வசம் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்னர் தொப்புளில் இரண்டு சொட்டு விட்டு மசாஜ் செய்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயில் எம்.சி.டி என்ற கொழுப்பு உள்ளதால் தேங்காய் எண்ணெயை இரவில் தொப்புளில் இரண்டு சொட்டு விட்டால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். உடலுக்கு தேவையான ஸ்டமினாவைக் கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு மேலே தடவும் பொழுது உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அதே போன்று தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவி வந்தால் தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்.

முகமும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். முகப்பருக்கள் வருவது குறைவாக இருக்கும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து தொப்புளில் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்தால் ரத்தம் இயற்கையாகவே சுத்தம் செய்யப்படுகிறது.

உடலில் உள்ள கழிவுகளும் வெளியேற்றப்படும். இதனால் “எக்சிமா” போன்ற தோல் வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா