Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா?
[Wednesday 2025-06-11 17:00]

இந்திய உணவுகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவை மற்றும் மணம் வெளிநாடுகளில் உள்ளவர்களை அதிகமாக கவரும். அதிலும் குறிப்பாக காலையில் ஆரோக்கியமான தானியங்களில் செய்யப்படும் உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்யப்படும் சுவையான காலை உணவுகள் பசியை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

இதன்படி, இந்த பட்டியலில் இந்திய உணவுகளுக்கு இடம் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிசல் பாவ், பராத்தா மற்றும் சோலே பாதுரே ஆகிய உணவுகள் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

அந்த வகையில், உலகிலேயே சிறந்த காலையுணவு எது? என்பது பற்றியும், அதிலுள்ள ஆரோக்கிய பலன்கள் பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1.மிசல் பாவ்

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் மிசல் பாவ் உணவிற்கு 18ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள காரம் மற்ற உணவுகளை ஓரங்கட்டியுள்ளது. TasteAtlas பட்டியலின்படி, மொறுமொறுப்பாகவும் பார்வைக்கு அழகாகவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் பழுப்பு நிறங்கள் இருக்கும்.

இந்த உணவில் முளைத்த பயறு வகைகள் இருக்கும். அதனை டார்ரி என்று அழைக்கப்படும் கறியுடன் பரிமாறுவார்கள். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் வெண்ணெய் தடவிய மென்மையான ரொட்டி ஆகிய உணவுகளும் பரிமாறப்படும்.

2.பராத்தா

பெரும்பாலான வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று தான் பராத்தா. இது பட்டியலில் 23 வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு வாழும் மக்கள் மதியம் மற்றும் இரவு உணவாக சாப்பிடுகிறார்கள். பராத் மற்றும் ஆட்டா என்ற சொற்களின் கலவையிலிருந்து இந்த உணவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெய்யில் அல்லது பட்டரில் சுடப்படும் இந்த முழு கோதுமை மா ரொட்டி வட்டம் அல்லது சதுர வடிவில் தயாரிக்கப்படுகிறது. அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், பூண்டு, இஞ்சி, மிளகாய், பனீர் அல்லது முள்ளங்கி போன்ற பொருட்களை நிரப்பி, சிறிது நேரம் ஊறுகாய், தயிர், சட்னிகள் அல்லது இறைச்சி மற்றும் காய்கறி கறிகளுடன் சேர்த்து, பரிமாறலாம்.

3. சோலே பதுரே

சோலே பதுரே 32 வது இடத்தை பிடித்துள்ளது. சோலே பதுரே இரண்டு உணவுகளின் கலவையாக தயாரிக்கிறார்கள். சோலே - ஒரு காரமான சுண்டல் கறி மற்றும் பதுரே - மைதா மாவால் தயாரிக்கப்படும் ஒரு வகை பூரி. வட இந்தியா முழுவதும் பிரபலமான இந்த உணவை கடந்த 1940களில் டெல்லியில் கண்டுபிடிக்கிறார்கள். வெங்காயம், ஊறுகாய், புதினா சட்னி மற்றும் குளிர்ந்த லஸ்ஸியுடன் சேர்த்து பரிமாறலாம். வட இந்தியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இந்த உணவை பெற்றுக் கொள்ளலாம். ஆரோக்கியமான உணவாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா