Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா?
[Thursday 2025-06-12 16:00]

கீரையினை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கீரை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருள். கீரை வகைகள் பல உள்ளன, அவற்றில் சில முக்கிய கீரைகள் அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை போன்றவை.

கீரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், உடம்பிற்கு தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.

கீரை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் தினமும் சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்துமாம்.

கீரையில் இருக்கும் கோய்ட்ரோஜன் என்ற கூறுகள் தைராய்டு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆதலால் கீரையை தொடர்ந்து எடுப்பதை தவிர்க்கவும்.

நாம் தினமும் கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் வைட்டமின் கே உங்களது ரத்தத்தை மெலிதாக்குமாம்.

கீரை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமாம். அத்தகையவர்கள் தினமும் கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒவ்வாமை பிரச்சனை அதிகமாகும்.

தினமும் கீரை சாப்பிட்டால் உங்களது உடலில் கால்சியம் உறிஞ்சுதலில் சிக்கலை ஏற்படுத்துமாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா