Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாதவிடாய் முடிந்து அடுத்த நாள் என்ன சாப்பிடணும்!
[Friday 2025-06-13 17:00]

பொதுவாக ஒப்பீட்டளவில் ஆண்களில் ஹார்மோன்கள் நிச்சயமாக மேலும் கீழும் செல்லக்கூடும், மேலும் தினசரி மற்றும் பிற சிறிய மாறுபாடுகளுக்கு உட்பட்டிருக்கலாம், ஆனால் பெண்களின் ஹார்மோன்கள் மிகவும் வேறுபட்டவை.மற்றும் பரந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை.

மாதம் தோறும் நிகழும் மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் உடலில் வியத்தகு ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். இத்தகைய ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஆற்றல் மட்டங்கள் முதல் மனநிலை, கருவுறுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியம் வரையில் ஆதிக்கம் செலுத்தும்.

உணவுமுறை மற்றும் ஹார்மோன்களுக்கு இடையிலான தொடர்பு பல அடுக்குகளைக் கொண்டது, ஆனால், அடிப்படையில், மாதவிடாயின் முன்னரும் மாதவிடாயின் போதும், மாதவிடாயின் பின்னரும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவுகள் தொடர்பில் விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதவிடாய் காலங்களில் எள்ளில் செய்யப்பட்ட மிட்டாய் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. எள்ளில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், உடல் சூடாகிவிடும் என்று சிலர் நினைக்கலாம், உண்மையில் அப்படி இல்லை. மாதவிடாய் சுழற்சியில், முதலில் அந்த 3 தொடக்கம் 4 நாட்களுக்கு எள்ளுருண்டை, எள்ளூ மிட்டாய் சாப்பிடுவது வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுசெய்ய துணைப்புரியும்.

மாதவிடாய் முடிவடைந்த பின்னர், கருமுட்டை வளரக்கூடிய பருவம். 10 நாட்கள் மெல்ல மெல்ல ஃபாலிக்கிள் விரிந்துகொண்டே வரும். 14வது நாள் அது உடைந்து அதிலிருந்த கருமுட்டை கருக்குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்ந்து வரும். அதனால் மாதவிடாய் முடிந்த அடுத்த 10 நாட்கள் பெண்களுக்கு ஆரோக்கியம் சிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக மாதவிடாய் முடிந்த நாளில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு பெண்களுக்கு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். உளுந்து வடை, உளுந்து தோசை, உளுந்தங் கஞ்சி என உளுந்தை விரும்பிய வகையில் எடுத்துக்கொள்ளலாம். கருப்பு உளுந்தை வறுத்து பொடி செய்து சாப்பிடுவதும் சிறப்பு . உளுந்து நல்ல புரத உணவு.

15 நாட்களுக்கு பின்னர் கருமுட்டை கருக்குழாய்க்குள் வந்த பிறகு, கருப்பையை வலுவாக வைத்துக்கொள்வதற்கும் அதிக ரத்தப்போக்கு வராமல் இருப்பதற்கும், உணவில் அதிகளவில் வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அதிகவலி இல்லாமல் இருப்பதற்கும் வெந்தயம் பெரிதும் துணைப்புரியும் மாடவிடாய்க்கு பின்னர் 15வது நாளில் இருந்து 28வது நாள் வரைக்கும் வெந்தயத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகமான எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து பிடித்த குழம்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். பெண்கள் மாதவிடாய் காலத்தில் முதல் 4 நாட்களுக்கு எள்ளு, அதற்கு பிறகு 15வது நாள் வரைக்கும் உளுந்து, அதற்கு பிறகு வெந்தயம் என முறையாக சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை எளிமையாக தவிர்க்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா