Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எந்தெந்த உணவினை மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது?
[Saturday 2025-06-14 16:00]

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவசியமாக இருக்கும் உணவுகளில் எந்தெந்த உணவினை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படையாகும். உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவினை நாம் ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் வீட்டில் சமைக்கும் சில உணவுகள் நாம் செய்யும் தவறினால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றது.

சமைத்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் சில உணவுகளை அவ்வாறு சாப்பிடக்கூடாது. அந்த வகையில் நாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சாதம்

சமைத்த சாதத்தில் பேசில்லஸ் சீரியஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருப்பதாால், இதனை சரியான முறையில் ப்ரிட்ஜில் சேமிக்காமல், சூடு செய்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும். அவ்வாறு சாப்பிட நினைத்தால் முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். சூடு செய்யும் போது ஒருமுறை கிளறிவிட்டு பின்பு சூடு செய்து சாப்பிடவும்.

உருளைக்கிழங்கு

வேக வைத்த உருளைக்கிழங்கினை மீண்டும் சூடு செய்தால், அது நஞ்சை உற்பத்தி செய்து செரிமான மண்டலத்தை பாதிக்குமாம். ஒருவேளை அவ்வாறு சூடு படுத்தி சாப்பிட நினைத்தால், நன்றாக மூடி போட்டி ப்ரிட்ஜில் சேமித்து வைத்து தேவைப்படும் போது சூடு செய்து சாப்பிடவும்.

கீரை வகைகள்

பசலைக்கீரை மட்டுமின்றி வேறு எந்த கீரை வகைகளையும் சமைத்த பின்பு மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, பின் நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா