Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு!
[Sunday 2025-06-15 17:00]

முக்கனிகளில் ஒன்றான பலா பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.இந்தளவுக்கு அதனை சுவை அலாதியாக இருக்கும். அது போல் பலா காயையும் சமைத்து சாப்பிடும்போது எந்தளவுக்கு ருசியைத் தருமோ, அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. பலா காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் புதிய இரத்தம் உற்பத்தி சீராக நடைபெரும். பலா உடலின் வலிமையை அதிகரிக்கிறது. பலா காய் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால், அதனுடன் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட வேண்டும். இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை கட்டுக்குள் வைப்க்க பெரிதும் துணைப்புரியும்.

பலா காயில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது. மேலும் மூலநோய் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பலா காயை காயவைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் மாவு, மருத்துவ குணங்கள் கொண்டது. இது நீரிழிவு நோயையும் விரைவில் குணமாக்கும் தன்மை கொண்டது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பலாக்காயில் கறிசுவையை மிஞ்சும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பலாக்காய் - 250 கிராம்

வெங்காயம் - 2 பூண்டு

6-7 பல் பச்சை மிளகாய்

2 மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லி தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

பிரியாணி இலை - 1

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

செய்முறை

முதலில் பலாக்காயை நன்கு தோலுரித்து, 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்

அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நறுக்கிய பலாக்காயை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு, கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கலவையை நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கலாக்காய் குழம்பு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா