Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மிஞ்சிய பழைய சாதத்தை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி?
[Monday 2025-06-16 17:00]

இரவு வேளைகளில் சமைத்த சாதம் மிஞ்சி விட்டது என்றால் அதனை காலையில் குப்பையில் கொட்டாமல் அதனை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பச்சை புளி சாதம் செய்தும் சாப்பிடலாம். இல்லாவிட்டால் பழைய சாதத்தை வைத்து சிலர் வடகம் செய்வார்கள். ஆனால் பெரிதாக யாரும் சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கமாட்டார்கள். அந்த வகையில், இரவில் மிஞ்சிய சாதத்தை வைத்து எப்படி சப்பாத்தி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீந்து போன சாதம் - 1 கப்

கோதுமை மாவு - 2 கப்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

சப்பாத்தி செய்வது எப்படி?

முதலில் மிதமாக உள்ள சாதத்தை நன்றாக வடித்து தனியாக வைக்கவும். அதனுடன் சம அளவு கோதுமை மா கலந்து, மிக்ஸியில் போட்டு, எண்ணெய் விட்டு அரைக்கவும்.

சாதத்தில் உப்பு சேர்த்தால் சப்பாத்திக்கு அரைக்கும் பொழுது உப்பு கொஞ்சமாக சேர்த்தால் போதுமாக இருக்கும். சாதம் முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு கோதுமை மாவு சிறிது சிறிதாக சேர்த்து பிணையலாம். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் சேர்த்து பிசைந்து விட்டு, 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்னர், எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போன்று மாவை உருட்டி தேய்த்து எடுத்தால், சப்பாத்தி போன்று வரும், அதனை கல்லில் போட்டு வேக விட்டு சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய விட்டு இறக்கவும்.

இப்படி செய்தால் சப்பாத்தி மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா