Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தலைமுடி வளர்ச்சியை இரு மடங்காக்கும் கொய்யா இலை!
[Tuesday 2025-06-17 17:00]

பொதுவாக நம்மிள் பலருக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை இருக்கும். இது பிரச்சினை தினமும் கொஞ்சம் முடிகள் தலையிலிருந்து கொட்டத்தான் செய்யும். இதை நாம் கவனிக்க மாட்டோம். கண்டுகொள்ளவும் மாட்டோம். ஆனால் சிலருக்கு தலை வாரும்போதெல்லாம் நிறைய முடி கொட்டும். இது காலப்போக்கில் ஒட்டுமொத்த முடியையும் இழக்க நேரிடுமோ என்ற கவலை உருவாகும். குறைவாக முடி கொட்டும் பொழுது கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். அதனால் அந்த பிரச்சினை பெரிதாக வெளியில் தெரியாது.

முடி கொட்டிய இடத்தில் புது முடிகள் முளைக்காத போது தான் தலைமுடி இழப்பு/ தலையில் முடி கொட்டுதல் ஒரு பிரச்சினை மாறுகிறது. அந்த வகையில், தலைமுடி உதிர்வு பிரச்சினை கட்டுபடுத்தும் இலை பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொய்யா இலை- 1

தண்ணீர்- 1 கப்

பயன்படுத்தும் முறை

முதலில் முடியின் அளவுக்கு ஏற்ப கொய்யா இலைகளை எடுத்து சரியாக 20 நிமிடயங்கள் கொதிக்க வைக்கவும்.

அதன் பின்னர் குளிர வைக்கவும். இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போன்று பயன்படுத்தலாம்.

நீங்கள் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இந்த திரவத்தை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்யவும்.

பேஸ்ட் போன்று அரைத்தும் போடலாம், இந்த கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.

பலன்கள்

கொய்யா இலைகளில் வைட்டமின்கள், ஊட்டசத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் தலைமுடி வளர்ச்சியில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வரும்.

கொய்யா இலை உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.

முடி உதிர்வை நிறுத்தி வேகமாக முடி வளர்ச்சியை தூண்டும் அளவுக்கு கொய்யா இலையில் மினரல்கள் உள்ளன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா