Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை!
[Wednesday 2025-06-18 18:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய பூசணிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட், ஃபைபர், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது. இது சருமத்தை பளபளப்பாக்கும் தன்மையை கொண்டுள்ளதுடன், பூசணிக்காய் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் அதிகம் கொண்டுள்ள பூசணிக்காயில் மனதை அமைதிப்படுத்தும் வேதிப்பொருட்கள் காணப்படுவதால், இது மனஅழுத்ததை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

பூசணிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதுடன் மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வு கொடுக்கின்றது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோயொதிர்ப்பு மண்டலம் வலுவடைகின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பூசணிக்காயில் எவ்வாறு அசத்தல் சுவையில் தோசை செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் - 2 பெரிய துண்டுகள்

ரவை - 1 கப்

தண்ணீர் - 1/4 கப்

கோதுமை மாவு - 1 கப்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1 சிறிய துண்டு

சீரகம் - 2 தே.கரண்டி

மிளகு - 2 தே.கரண்டி (ஒன்றிரண்டாக தட்டியது)

கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் பூசணிக்காயை விதைகளுடன் சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அவற்றை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் 1 கப் ரவை, 1/4 கப் தண்ணீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின்னர் அதனுடன் சீரகம், தட்டி வைத்துள்ள மிளகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குறைந்தது 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.

அதன் பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான பூசணிக்காய் தோசை தயார். அது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி மற்றும் எந்த குழம்புடன் சூப்பராக பொருந்தும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா