Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் பலாக்கொட்டை-கத்திரிக்காய் குழம்பு!
[Thursday 2025-06-19 16:00]

விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது? மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் தான் சமையல். இது ஒரு அற்புதமான கலை என்றால் மிகையாகாது. அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் பாலாக்கொட்டை மற்றும் கத்திரிக்காயை வைத்து அசைவ சமையலே தோற்றும் போகும் அளவுக்கு அருமையான சுவையில் பலாக்கொட்டை கத்திரிக்காய் குழப்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

மல்லித் தூள் - 2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)

பலாக்கொட்டை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

தண்ணீர் - 3 டம்ளர்

பூண்டு - 1 கைப்பிடி (நன்கு தட்டிக் கொள்ளவும்)

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிவிட்டு, அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையத்து அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் பலாக்கொட்டையை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 3 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் காய்கறிகளை வேகவிட வேண்டும். குறிப்பாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.

10 நிமிடங்களின் பின்னர் மூடியைத் திறந்து, அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 5 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும், சுவையான பலாக்கொட்டை கத்திரிக்காய் குழம்பு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா