Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் பன்னீர் கிரேவி!
[Friday 2025-06-20 16:00]

பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது. பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கின்றது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்புக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. பன்னீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதுமட்டுமன்றி பன்னீரில் அதிகளவில் ஜிங்க் காணப்படுகின்றது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

பன்னீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, மேலும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கின்றது.

மேலும் பன்னீரில் உள்ள லினோலிக் அமிலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் சரும ஆரோக்கியத்திதை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீரை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், ஹைதராபாதி பாணியில் நாவூரும் சுவையில் பன்னீர் கிரேவி எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையானவை

தக்காளி - 2 (நறுக்கியது)

புதினா - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

முந்திரி - 10-12 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)

தாளிப்பதற்கு எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - 1/4 தே.கரண்டி

பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

பெரிய வெங்காயம் - 1 ( மிகவும் பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

மல்லித் தூள் - 2 தே.கரண்டி

சீரகத் தூள் - 1 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி

சிக்கன் மசாலா - 2 தே.கரண்டி

சுடுநீர் - 2 1/2 கப் உப்பு - சுவைக்கேற்ப

வெண்ணெய் - 1 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, புதினா, கொத்தமல்லியை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, சுடுநீரில் ஊற வைத்த முந்திரியை சேர்த்து, நீரை ஊற்றி அததையும் நன்றாக மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, அத்துடன் பன்னீர் துண்டுகளையும் சேர்த்து ப்ரை செய்து, பன்னீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர், அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், சிக்கன் மசாலா சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

அதனையடுத்து அதில் 2 1/2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் ஹைதராபாதி பாணியில் ஆரோக்கியம் நிறைந்த பன்னீர் கிரேவி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா