Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் சிக்கன் பிரட்டல்!
[Saturday 2025-06-21 16:00]

அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியவில் முதலிடம் வகிக்ககும் சிக்கனை பல்வேறு பாணிகளிலும் சமைக்கலாம்.சுமாராக சமைத்தாலே அட்டகாசமான சுவை தரும் உணவுகளில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கனை கொண்டு வித்தியாசமான முறையில் நாவூரும் சுவையில் சிக்கன் பிரட்டல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

சிக்கன் - 500 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 6 பல்

துண்டு இஞ்சி - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

தயிர் - 1 கப்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

மிளகாய்தூள் - 1 தே.கரண்டி

மல்லிதூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவி்ட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தட்டிய இஞ்சி, பூண்டுடன் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மென்மையாக வதக்கியவுடன் சிக்கனை சேர்க்க வேண்டும்.

பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் சிக்கனை வேகவிட வேண்டும். இதற்கிடையில் ஒரு மிக்சி ஜாரில், மிளகு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

சிக்கன் நன்றாக வெந்த பின்னர் அரைத்த பொடியையும் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கினால் அவ்வளவு தான். அசத்தல் சுவையில் சிக்கன் பிரட்டால் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா