Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் மட்டன் மூளை மசாலா!
[Tuesday 2025-06-24 19:00]

பெரும்பாலும் அசைவ பிரியர்களின் விரும்பப்பட்டியில் மட்டன் முக்கிய இடத்தை பிடித்துவிடும். குறிப்பாக ஆட்டு மூளையில் செய்யப்படும் மசாலாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கும். ஆட்டு மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பிரபலமான மற்றும் சுவையான இந்திய உணவு தான் மட்டன் மூளை மசாலா. இது மசாலாப் பொருட்களுடன் வதக்கி செய்யப்படும் ஒரு காரசாரமான மற்றும் சுவையான சைடு டிஷ் ஆகும். அந்த வகையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும், மட்டன் மூளை மசாலாவை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு தேவையானவை

மட்டன் மூளை - 4

தண்ணீர் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - 1தே.கரண்டி

மசாலா செய்வதற்கு

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 2 தே.கரண்டி

சீரகத் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - 1/2 தே.கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

மிளகுத் தூள் - 2 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணிரை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் சுத்தம் செய்த ஆட்டு மூளையையும் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு இறக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அந்த மூளையை வெளியே எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

அதனையடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி, பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும். பின்னர் அதில் வேக வைத்து சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு மூளையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் மிளகுத் தூளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு , 1/4 கப் அளவுக்கு நீரை ஊற்றி கிளறிவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவிட்டு இறுதியாக கொத்தமல்லியைத் தூவினால், இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் சுவையான ஆட்டு மூளை மசாலா தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா