Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முருங்கைகீரை ரசம் குடிங்க: தரை தொடும் தூரம் வரை தலைமுடி வளரும்!
[Friday 2025-06-27 16:00]

கிராமத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்று மருத்துவ குணங்கள் உள்ள மரங்களை வளர்ப்பது குறைவு. இந்த முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவ பலன்கள் அதிகமாக கொண்டவையாகும். முருங்கைகீரையை கீரைகளின் அரசன் என்றும் அழைப்பார்கள். வாரத்திற்கு மூன்று முறையாவது சமைத்து சாப்பிட வேண்டும். ஏனெனின் இந்த கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபைபர், புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இவை மனிதர்களுக்கு ஏற்படும் நாள்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது. இந்த கீரையை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் புரதக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி பாதிப்பு போன்ற நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.

அதே சமயம், தற்போது நம்மிள் பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது. அந்த பிரச்சினையுள்ளவர்களும் அடிக்கடி முருங்கை கீரை சாப்பிடலாம். இதிலுள்ள ஊட்டசத்துக்கள் தலைமுடி வேர்களுக்கு ஆரோக்கியம் கொடுத்து வளர்ச்சியை அதிகப்படுத்தும். அத்துடன் தலைமுடி வளர்ச்சிக்கு ஏற்றதொரு சூழலையும் உருவாக்கிக் கொடுக்கும்.

அத்துடன் ரத்தசோகை உள்ளவர்களும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும். முருங்கையை பொறுத்தவரை இதை வித விதமாக சமைக்கலாம்.

வழக்கமாக முருங்கைக் கீரையை வைத்து கடைசல் பொரியல் மட்டும் தான் செய்வார்கள். ஆனால் இந்த கீரையில் மசியல், பிரட்டல், குழம்பு, சூப் மற்றும் ரசம் என பல வகைகளில் சமைக்கலாம்.

அந்த வகையில், முருங்கை கீரையில் எப்படி ரசம் வைக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – 1 கைப்பிடி

துவரம்பருப்பு – 2 மேசைக்கரண்டி

தக்காளி – 1

புளி – ஒரு எலுமிச்சை அளவு

மிளகு – 1 மேசைக்கரண்டி

சீரகம் – 1 மேசைக்கரண்டி

பூண்டு – 4 பல்

மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி இலை– தேவையான அளவு

ரசம் எப்படி வைப்பது?

முதலில் துவரம்பருப்பை கொஞ்சமாக எடுத்து வேகவைத்து வைக்கவும். அதன் பின்னர், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக போட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அடுத்து ரசத்திற்கு தேவையான புளியை ஒரு கப் அளவிலான தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அதில் பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதங்க விடவும். பிறகு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதங்க விடவும்.

வதக்கிய பிறகு கலவையுடன் மசித்த மிளகு விழுதையும் சேர்க்கவும். அதனுடன் புளி நீரையும் ஊற்றி நன்றாக கலந்து விடவும். புளி நீர் கொதிக்க ஆரம்பித்ததும் முருங்கைக்கீரை சேர்த்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக வேக வைத்த துவரம் பருப்பு நீருடன் சேர்க்கவும். ரசம் ஒரளவு கெட்டியாக கொதித்து வந்தவுடன் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

பலன்கள்

முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சமைக்கும் பொழுது அதிலுள்ள காரம் உடல் சூட்டை தணிக்கும். இதனால் தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

முருங்கை கீரையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இவை தலைமுடிக்கு ஊட்டம் கொடுத்து வேகமாக வளர வைக்கும். முருங்கை ரசம் குடிக்கும் பொழுது முருங்கையிலுள்ள சத்துக்கள் நேரடியாக உடலுடன் கலக்கின்றது.

மாலை நேரத்தில் வீட்டில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரையில் ரசம் செய்து குடிக்கலாம். இதிலுள்ள சத்துக்கள் பித்தம், கண் கட்டி பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வாக உள்ளது.

மூட்டுவலி, வாயுக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு மருத்துவர் போன்று செயற்பட்டு, வலியை தடம் தெரியாமல் ஓட விடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா