Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூறும் சுவையில் பூண்டு தொக்கு!
[Saturday 2025-06-28 17:00]

இட்லி, தோசைக்கு எத்தனை சட்னி வகைகள் செய்தாலும், ஒருமுறை பூண்டு தொக்கை செய்து பார்த்தாலே, அந்த சுவையை மறக்கவே முடியாது. மிகச் சுலபமான முறையில் வீட்டிலேயே இந்த ருசிகரமான பூண்டு தொக்கை எப்படி செய்யலாம் என்பதைக் காணலாம். இதை சரியான அளவில் போட்டு முறையாக செய்தால் சுமார் 10 நாட்களுக்கு கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.

தேவையான பொருட்கள்

பூண்டு - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

காய்ந்த மிளகாய் - 6 முதல் 10

புளி - 1 எலுமிச்சை பழம் அளவு

சீரகம் - அரை டீஸ்பூன்

வெல்லம் - சின்ன துண்டு

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் காய்ந்த மிளகாய்களை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கருகாமல் இருக்க, இடையறாது கிளறிக்கொண்டே இருங்கள்.

மிளகாய்கள் சிவப்பாக மாறி வாசனை வந்ததும், அவற்றை ஒரு பக்கமாக எடுத்துக்கொள்ளவும். அதே எண்ணெயில், தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

பூண்டு பொன்னிறமாக மாறும் போது, அதில் இஞ்சி மற்றும் சீரகத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின், புளியை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறி, கலவையை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

இப்போது, மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாயும் உப்பும் சேர்த்து கொரக்கொரப்பாக அரைக்கவும். அதனுடன், பூண்டு கலவையும் வெல்லம் சேர்த்து நைசாக அரைத்தால், சூப்பரான பூண்டு தொக்கு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா