Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை மளமளவென குறைக்கும் பார்லி கஞ்சி!
[Sunday 2025-06-29 16:00]

உடல் எடையைக் குறைப்பதற்கு பார்லி அரிசியை எவ்வாறு கஞ்சி வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து காணப்படுவதால் பலரும் சிரமத்தில் காணப்படுகின்றனர். மேலும் எடையைக் குறைப்பதற்கும், கடுமையான டயட் முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நல்ல சத்தான மற்றும் உடல் எடையை குறைக்க தூண்டும் உணவினை தெரிவு செய்து சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதாக குறைக்கலாம். அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பார்லி அரிசி - 100 கிராம்

கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, பார்லி அரிசியை சேர்த்து ஒரு 2 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை அரைத்து பொடி செய்து தனியாக வைக்கவும். பின்பு அடுப்பில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு 4 ஸ்பீனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

5-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா