Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பார்லர் செல்லாமல் முகத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா?
[Monday 2025-07-14 16:00]

பார்லர் செல்லாமல் முகத்தை ஜொலிக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் முகத்தினை பளபளபாக்க பலவிதமான கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தின் அழகை அதிகரிக்கலாம். ஆம் சப்பாத்தி, பூரி இவற்றிற்கு பயன்படுத்தும் கோதுமை மாவு, முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் செய்யும்.

ஒரு சின்ன பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பசும்பால், அரை ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலக்கவும்.

முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு, கண் பகுதிகளை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலே அப்ளை செய்யவும்.

மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும்.

பத்து நிமிடம் காயவிட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை தடவவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா