Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!
[Wednesday 2025-07-30 16:00]

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு சிறந்த பலனை அளிக்கின்றதாம். செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவும் வெண்டைக்காய், ரத்த சர்க்கரை அளவினை ஒழுங்குப்படுத்துவதிலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்ததாகும்.

ஆய்வு ஒன்றின்படி, நீரிழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு, 6 மணிநேரத்திற்கு ஒருமுறை 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரையை குறைக்க உதவுகின்றதாம்.

மேலும் இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, எடையைக் குறைப்பதில் உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.

ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கும் வயிற்று புண்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.

வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்த்து, உடலின் வலிமையையும் அதிகரிக்கும் என இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா