Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விபூதி எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
[Saturday 2025-08-16 16:00]

இந்துக்களை பொருத்தமட்டில், விபூதிக்கு முக்கிய இடம் கொடுப்படுகின்றது. குறிப்பாக சிவன் பக்தர்கள் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்டு பட்டையாக தீட்டிக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். நெற்றியில் விபூதி பூசுவதென்பது இந்து சமயத்தின் பிரகாரம் ஒருவரின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

ஆனால் தினசரி பயன்படுத்தும் விபூதி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.

குறிப்பாக இந்துக்களில் சிலருக்கு இருப்பற்றி தெரிந்திருக்காது. வாசனை கமழும் இந்த விபூதியை திருநீறு என்றும் அழைப்பார்கள்.

தெய்வீக மணம் கொண்ட இந்த விபூதியை எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

விபதி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் சாணம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம் பசுவின் சாணத்தில் இருந்து தான் விபூதி தயார் செய்யப்படுகின்றது.

முதலில் சாணத்தை வட்ட வடிவில் தட்டி சுவற்றில் காய வைத்து வரட்டியை உருவாக்கி குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெயிலில் காயவிடுடுகின்றார்கள். சில கிராமங்களில் இந்த வரட்டியை காயவைத்து விறகுக்கு மாற்றாகவும் பயன்படுத்துவார்கள்.

விபூதி தயாரிக்க நன்கு காயவைத்த வரட்டியுடன் நெய் மற்றும் மூலிகைப் பொருட்களான சூடம் ,ஏலக்காய் சேர்த்து நெருப்பில் போட்டு நன்றாக எரிக்கப்படுகின்றது.

இதன் முடிவில் கிடைக்கும் சாம்பலை ஆற வைத்து பத்திரமாக எடுத்து வைப்பார்கள். இதுதான் கோயில்களில் விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா