Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் கெட்டியான தேங்காய் சட்னி!
[Monday 2025-08-18 16:00]

இந்திய உணவு வகைகளில், சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தேங்காய்சட்னியில் பல வகைகள் உள்ளன. வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் , பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தேங்காய் சட்னியை எப்போதும் போல் இல்லாமல் சற்று கெட்டியாகவும் அசத்தல் சுவையிலும் செய்வதற்கு சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்தாலே போதும்.

அந்தவகையில் கண்ணை கவரும் பச்சசை நிறத்தில் அருமையான சுவையில் கொத்தமல்லி தேங்காய் சட்னியை எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எணணெய் - 1 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு - 1தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தே.கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி- 1 சிறிய இன்ச்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

புளி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - 1 கொத்து

புதினா - 1 கையளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 2

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்நிறமாக நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய தேங்காய், புளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி, அதில் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியில் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

நன்கு ஆறியதும் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து சட்னியுடன் கலந்தால், அவ்வளவு தான் அருமையான சுவையில் தேங்காய் கொத்தமல்லி சட்னி யார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா