Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
குளிக்கும் நீரில் இதை சேருங்கள்: சருமம் பளபளப்பாகும்!
[Thursday 2025-10-09 16:00]

பருவ கால மாற்றத்தால் பல பிரச்சனைகள் சருமத்தில் வரும். இந்த நேரத்தில் நாம் நமது சருமத்தை சிறப்பாக பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது சருமத்தில் இறந்த கலங்கள் சேரும். இந்த இறந்த கலங்கள் உடலில் சேர்ந்தால் அவை பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் பிக்மன்டேஷன் மற்றும் பொலிவிழப்பு போன்ற பிரச்சனைகள் வரும். எனவே குளிக்கும் போது குளிக்கும் நீரில் ஒரு பொருளை சேர்த்தால் உடலில் இறந்த கலங்கள் நீங்கி சருமம் பளபளக்கும்.

தேன் மற்றும் வினிகர் - குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு கப் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்க்கவும். இந்த தண்ணீரில் குளிக்கவும்.

சோப் கெமிக்கல் என்பதால் பொலிவை அதிகமாக்க சோப்புக்கு பதிலாக முல்தானி மெட்டி பயன்படுத்தவும். இது மிகவும் பயனுள்ள ஒரு விடயம். இந்த குளியல் சோர்வை நீக்கி, தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். இதை தினமும் பின்பற்றா விட்டாலும் வாரத்திற்கு மூன்று ்தடவை பின்பற்றுவது சிறந்த பலன் தரும்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் - குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதில் மூன்று தேக்கரண்டி பாதாம் எண்ணெயையும் இரண்டு தேக்கரண்டி தேனையும் சேர்க்கவும். பின்னர் இந்த தண்ணீரில் குளிக்கவும். இதன் பின்னர் நீங்கள் சருமம் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை காணலாம்.

ஆனால் இந்த குளியல் முறையை தினமும் செய்தால் நன்மை தரும்.

எலுமிச்சை மற்றும் தேன் - குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதில் ஒரு எலுமிச்சையின் சாற்றை பிழிந்து இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்கவும். அதன்பிறகு இந்த தண்ணீரில் குளிக்கவும். இது எந்த தோல் வியாதிகளையும் இறந்த சருமத்தையும் தடுக்கும். இதனால் சருமம் பளபளப்பாகும்.

குளிர்காலம் மற்றும் பருவ நிலை மாற்றங்கள் வரும் போது உடலை இதுபோன்ற மூன்று முறைகளில் ஒன்றை பயன்படுத்தி குளிப்பது சிறந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா