Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
Diwali Special: ஆட்டுக்கால் பாயா!
[Monday 2025-10-20 16:00]

இந்த தீபாவளிக்கு வீட்டில் காலையில் கண்டிப்பாக ஏதாவது ஷ்பெஷலாக செய்ய வேண்டும் என ஆசைப்படுவீர்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் ஆட்டுக்கால் பாயா ஒரு முறை செய்து பாருங்கள். இந்த ரெசிபி தென்னிந்தியாவில் விரும்பப்படும் ஒரு சூப் வகையாகும். இதில் ஆட்டுக்கால்களும் மசாலாப்பொருட்களும் சேர்த்து செய்கின்றனர். இதை பரோட்டா இடியப்பம் இட்லி போன்ற உணவுகளுடன் சுடசுட பரிமாறினால் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கால் – 4

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp

தேங்காய் துருவல் – ½ கப்

சோம்பு – 1 tsp

சீரகம் – 1 tsp

மிளகு – ½ tsp

கசகசா – 1 tsp

பச்சை மிளகாய் – 2

பட்டை – 1துண்டு

கிராம்பு – 3

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

கருவேப்பிலை – சில

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 tbsp

செய்யும் முறை

மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து மசாலா பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து லேசாக கிளறவும்.

வேகவைத்த ஆட்டுக்காலை அதே வேகவைத்த தண்ணீரோடு சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் குக்கரை மூடி 1 விசில் வர விட்டு இறக்கவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா