Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முட்டி வலிக்கு நிவாரணம்: ஒயிட் மட்டன் பாயா!
[Sunday 2025-11-30 19:00]

ஆட்டுக்கால் நான்கு இருந்தால் ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகளுக்கு பொருந்தும் வகையில் மட்டன் பாயா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். நான்கு ஆட்டு கால்கள் இருந்தால் வீட்டில் ஆப்பம், இடியாப்பம் செய்யும் போது இந்த பாயா செய்வது இரண்டு இடியப்பத்தை அதிகமாக சாப்பிட வைக்கும். பாயா என்பது காரம் குறைவாக வெள்ளை நிறத்தில் செய்யப்படும் ஒரு குழம்பு வகையாகும். ஆட்டுக்கால் பாயா எலும்புகள், மூட்டுகள், சருமம், முடி ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கொலாஜன் மற்றும் ஜெலட்டின் மூட்டு வலியை நிர்வகிக்கவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள்

4ஆட்டின் கால்

தாளிக்க

2பட்டை

4கிராம்பு

4ஏலக்காய்

3பச்சை மிளகாய்

3தக்காளி

20வெங்காயம்

தேவைக்குமல்லித்தழை

தேவைக்குகறிவேப்பிலை

1 டேபிள் ஸ்பூன்இஞ்சி விழுது

1 டேபிள் ஸ்பூன்பூண்டு விழுது

1/2 கப்தேங்காய் அரைத்த விழுது

கால் கப்தயிர்

1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

தேவைக்குஉப்பு

கறி மசாலாவுக்கு

5வற்றல் மிளகாய்

2 டேபிள் ஸ்பூன்முழு மல்லி

1/2 டீஸ்பூன்பெருஞ்சீரகம்

1/2 டீஸ்பூன்ஜீரகம்

1/2 டீஸ்பூன்நல்ல மிளகு

1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்

1 டீஸ்பூன்கசகசா - இவை அனைத்தையும் வறுத்து நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

செய்யும் முறை

ஆட்டின் கால் நான்கையும் எடுத்து அடுப்பில் வைத்து சுட்டு முடி எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

இதில் கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் இதில் ஆட்டுக்காலை‌ப் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து ஆட்டுக்கால் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்னர் அடுப்பை லேசான தீயில் விட்டு தயிர் சேர்த்து மிக்ஸ் செய்ய அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும்.

இதில் தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்து கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஐந்து விசில் வரை வேக விடவும்.

இது வெந்ததும் இறக்கவும். அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆட்டுக்கால் பாயா ரெடி.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா