Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தங்கத்தை விட விலை அதிக பட்டியலில் இடம்பிடித்த இறைச்சிகள்!
[Friday 2026-01-02 16:00]

உலகிலேயே மிகவும் விலை அதிகமான இறைச்சி வகைகள் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வரகின்றது. நாம் சாப்பிடும் உணவுகள் தங்கத்தை காட்டிலும் விலை அதிகம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும். ஆனால் அது தான் உண்மை. சில அசைவ உணவுகள் தங்கத்திற்கு நிகராக போட்டி போடுகின்றது. சில நேரங்களில் அவை தங்கத்தை விட விலை அதிகமாகவும் இருக்கலாம். அப்படி அசைவ உணவுகளில் டாப் 5 இடத்தில் உள்ள உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

வாக்யு மாட்டிறைச்சி

இது ஜப்பானில் தோன்றிய ஒரு தனித்துவமான கால்நடை இனமாகும். அதீதமான மென்மை மற்றும் நுணுக்கமான சுவை காரணமாக, இதன் இறைச்சி உலகம் முழுவதும் புகழைப் பெற்றுள்ளது.

உணவு, பராமரிப்பு, வாழும் சூழல் அனைத்தும் கவனமாக நிர்ணயிக்கப்படுவதால், இறைச்சியின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே இந்த இறைச்சிக்கு உலக சந்தையில் அதிக அளவில் தேவை உள்ளது.

உண்மையான ஜப்பானிய வாக்யு மாட்டிறைச்சியின் விலை ஒரு கிலோக்கு சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அயம் செமானி

இது சாதாரணமாக நமக்கு தெரிந்த கோழி இல்லை. பொதுவாக கோழி இறைச்சியின் விலை குறைவாக இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால் இந்த வகை கோழிகள் விலை அதிகம்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் காணப்படும் இந்த அரிய கருப்பு கோழி, அதன் தனித்துவமான தோற்றத்தால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

இதன் இறகுகள் மட்டுமல்லாது, தோல், அலகு, எலும்புகள், இறைச்சி மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும்.

இவ்வகை கோழி அதன் அரிது தன்மை மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக அதிக மதிப்பை பெற்றுள்ளது. இதன் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செல்லும் என கூறப்படுகிறது.

இந்த அதிக விலை கொண்ட கோழியை “லம்போகினி கோழி” என்ற பெயரால் மக்கள் அழைக்கின்றனர்.

புளூஃபின் டுனா

இதுவும் கடலில் கிடைக்கும் ஒரு பிரபலமான உணவாகும். புளூஃபின் டுனா எனப்படும் இந்த மீன், உலகில் மிகுந்த சுவை கொண்ட மீன் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பதும், தனித்துவமான ருசி கொண்டதுமாக இருப்பதால், ஜப்பானிய சுஷி மற்றும் சாஷிமி கலாச்சாரத்தில் இந்த மீன் முக்கியம் பெறுகின்றது.

குறிப்பாக இந்த மீனின் வயிற்றுப் பகுதி “ஓடோரோ” என அழைக்கப்படுகிறது. வெண்ணெய் போல மென்மையான அமைப்பு மற்றும் வாயில் கரையும் சுவை காரணமாக, உணவு விரும்பிகள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

ஜப்பானில் நடைபெறும் புகழ்பெற்ற மீன் சந்தை ஏலங்களில், புளூஃபின் டுனா கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுவது வழக்கம். இந்த மீன் இறைச்சியின் விலை ஒரு கிலோக்கு சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக கூறப்படுகிறது.

அல்மாஸ் கேவியர்

அல்மாஸ் கேவியர் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த உணவுப்பொருள்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அரிய வகை உணவாக விளங்கும் இதை அனைவரும் வாங்க முடியாது.

காஸ்பியன் கடலில் வாழும் மிகவும் அபூர்வமான அல்பினோ பெலுகா ஸ்டர்ஜன் மீனின் முட்டைகளிலிருந்தே இந்த கேவியர் தயாரிக்கப்படுகிறது.

தங்க மஞ்சள் நிறத்தில் மின்னும் இந்த முட்டைகள், அதீதமான சுவை மற்றும் மென்மையான தன்மை கொண்டது.

அதன் அரிது தன்மை மற்றும் உயர்ந்த தரம் காரணமாக அல்மாஸ் கேவியரின் விலை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அல்மாஸ் கேவியரின் விலை சுமார் 43,500 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்திய மதிப்பில் இது 28 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை, தற்போதைய தங்கத்தின் மதிப்பை விடவும் பல மடங்கு அதிகமானதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா