Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுக்கு காரணமான ஒற்றை சூப்!
[Sunday 2026-02-01 17:00]

ஜப்பானியர்கள் தங்களது நீண்ட கால ஆயுளுக்கு எடுத்துக் கொள்ளும் சீக்ரெட் சூப்பான மிசோ சூப் எவ்வாறு செய்வது என்பதையும் இதன் பயன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஜப்பான் மக்களைப் பார்த்து மற்ற நாடுகளில் உள்ள மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கை முறை, இளமை, அழகு, கல்வி, ஆக்கம், கண்டுபிடிப்பு என அனைத்தும் வித்தியாசமாகவும், மற்றவர்களை வாயடைக்க வைக்கும் நிலையிலும் இருக்கும்.

அதிலும் இவர்களின் உணவுப்பழக்க வழக்கம் இன்றைய இளைஞர்களை பெறும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஜப்பான் மக்கள் நடுத்தர வயதில் உயிரிழப்பது கிடையாது... பெரும்பாலும் நீண்ட காலம் வாழ்ந்து முழு ஆயுள் காலத்தினை நன்றாக கழித்த பின்னரே இறப்பை சந்திக்கின்றனர்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் இவர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாகவே இருக்கும். அதில் ஒன்று தான் மிசோ சூப் ஆகும்.

பொதுவாக மற்ற சூப்கள் போன்று இந்த மிசோ சூப் இருப்பதில்லை. இவை நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் சூப் ஆகும். இதில் அடிப்படையான பொருள் என்னவெனில் சோயா தானாம்.

சோயாவை ஊற வைத்து பின்பு வேக வைத்து பயன்படுத்துகின்றனர். மேலும் டோஃபுவும் சேர்க்கின்றனர். அதுமட்டுமின்றி முள்ளங்கி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் வினிகர் சேர்த்து ஊற வைத்து சேர்க்கப்படுகின்றது.

இவைகள் நொதித்து ஒன்றாக சேர்ந்து ப்ரோபயாடிக் பானமாக மாறுகின்றது. இதையே ஜப்பானிகள் தினமும் எடுத்துக்கொள்கின்றனர்.

மிசோ சூப் நொதித்தல் முறையில் செய்யப்படுவதால், இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ப்ரோ பயாடிக்ஸ் மட்டுமின்றி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற சத்துக்களும் மினரல்களும் நிறைந்துள்ளது.

இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, கே எலும்புகளை வலிமையாக்குகின்றது. மேலும் செல்லுலார் சேதத்தையும் தடுக்கின்றது.

குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், ஜீரண என்சைம்கள் உற்பத்தியினை அதிகரித்து ஜீரணத்தையும் மேம்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை பல மடங்கு அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தத்தினையும் சீராக வைக்கின்றது. மேலும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.

முக்கியமாக புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகமாக உள்ளது. நுரையீரல், மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோயினை எதிர்த்தும் போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மிசோ சூப்பில் நொதிக்க வைக்கும் போது அதிகமாக சோடியம் சேர்க்கப்படுகின்றது. இது ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கச் செய்யும். ஆகவே ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதை கவனமாக எடுக்கவும்.

இந்த சூப்பினை அதிகமாக சூடு செய்தால் அதிலுள்ள ப்ரோ பயாடிக் பண்புகள் மறைந்துவிடுகின்றது. ஆகவே அதிகமாக சூடு செய்யாமல் இருப்பது நல்லது.

இதில் சோயா, முள்ளங்கி சேர்க்கப்படுவதால், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா