Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாவூரும் சுவையில் கொங்குநாடு கோழிக்குழம்பு!
[Tuesday 2026-02-03 16:00]

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலாவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக வித்தியாசமான முறையில் சமைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். அந்தவயைில், இன்று வீட்டில் உள்ள சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், கொங்கு நாடு கோழி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பூண்டு

சிக்கன்

வெள்ளைப்பூண்டு

பூண்டு -4 பல்

சோம்பு -1 தே.கரண்டி

இலவங்கப்பட்டை - சிறிய துண்டு

கிராம்பு -2

கசகசா - 3 தே.கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு

வறுத்து அரைக்க தேவையானவை

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் -அரை மேசைக்கரண்டி

கறிவேப்பிலை -1 கொத்து

கொத்தமல்லி விதைகள் -1 மேசைக்கரண்டி

வர மிளகாய் -3

பெரிய வெங்காயம் -2 நறுக்கியது

குழம்புக்கு

எண்ணெய் - 3 தே.கரண்டி

சின்ன வெங்காயம் -1/2 கப்

கறிவேப்பிலை - 3 கொத்து

தக்காளி - 1 நறுக்கியது

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

சிக்கன் - 500 கிராம்

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, மென்மையாக அரைத்துக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி விதைகள் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில், நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் லேசாகப் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கி, இறக்கி ஆறவிட வேண்டும்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி, மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அதனையத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் 3 கொத்து கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் கண்ணாடி போல நிறம் மாறும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியையும் மஞ்சளையும் சேர்த்து, தக்காளி நன்றாக வெந்து குழையும் வரையில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, இஞ்சி, பூண்டு வாசனை போகும் வரை வதக்கி, பச்சை வாசனை போனதும் வறுத்த அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கிளவிட வேண்டும்.

அதன்பின் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும் நன்றாக கிளறிவிட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

20 தொடக்கம் 30 நிமிடம் நன்றாக வெந்தவுடன் கடைசியாக உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான் சுவையான கொங்கு நாடு கோழிக் குழம்பு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா