Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி!
[Wednesday 2026-02-04 15:00]

காலையில் ஆரோக்கியமான சத்தான சட்னி செய்ய ஆசைப்பட்டால் வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடுங்க. வீட்டில் எப்போதும் இட்லி தோசை செய்தால் கட்டாயம் எதாவது ஒரு சட்னி செய்வது வழக்கம். ஆனால் எல்லோரும் மிகவும் இலகுவாக இருக்கும் தேங்காய் சட்னியை தான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் என்ன சட்னி செய்தாலும் வேர்க்கடலை சட்னி தரும் சுவை வேறு எந்த சட்னியும் தராது. வேர்க்கடலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.

இது உங்கள் உணவிற்கு ஒரு புதிய சுவையையும் உங்கள் நாக்கிற்கு ஒரு புதிய உணர்வையும் தரும். இட்லி தோசை போன்ற உணவுகளுடன் இதை வைத்து சாப்பிடலாம். இப்போது எளிமையாக வேர்க்கடலை சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரை கப் வேர்க்கடலை, தேங்காய் துண்டுகள் (நடுத்தர அளவு), பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பல், புளி கூழ், சுவைக்கேற்ப உப்பு. எண்ணெய், கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம்.

செய்முறை

சட்னி செய்ய முதலில் பாத்திரமொன்றில் வேர்க்கடலையை சேர்த்து தீயை குறைவாக வைத்து, வேர்க்கடலை வறுக்கவும். வறுக்கும் போது வேர்க்கடலை கருக கூடாது கருகினால் சட்னி கசப்பு சுவை கொடுக்கும்.

ஆனால் வேர்க்கடலை நன்றாக வறக்க வேண்டும். இது நன்றாக ஆறியதும், அப்படியே மிக்ஸியில் சேர்த்து, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி கூழ் மற்றும் உப்பு சேர்த்து, போதுமான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மைபேல அரைக்க கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதை எண்ணை உற்றி சூடாக்க வேண்டும்.

எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து வதக்கவும். பின்னர் உளுந்து சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும். இறுதியாக, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் அதை அரைத்த சட்னியில் கொட்ட வேண்டும். இந்த சட்னி சத்தானதுதும் ஆரோக்கியமும் கூட. .தை எந்த உணவடனும் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பாக இட்லி, தோசை, வடை அல்லது பொங்கலுடன் இது சிறந்த தேர்வு. இது தவிர சப்பாத்தி, பரோட்டா அல்லது சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து இந்த சட்னியுடன் சாப்பிட்டால் சவை பிரமாதம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா