Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பக்கவாதம் வராமல் இருக்க ஜப்பானியர்கள் என்ன செய்கின்றனர்?
[Saturday 2026-02-07 05:00]

பக்கவாதம் வராமல் இருப்பதற்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் வழியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு பிரச்சனைகள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான் பக்க வாதத்திற்கு காரணமாகும். அதே போன்று இதய ஆரோக்கியம் சரியாக இல்லை என்றாலும் பக்கவாதம் அபாயம் ஏற்படும். அதாவது ரத்தக்குழாயில் அடைப்பு, சீரற்ற இதய துடிப்பு இவற்றினால் இஸ்கிமிக் பக்வாதம் ஏற்படலாம்.

ஆனால் ஜப்பான் நாட்டு மக்கள் சில உடற்பயி்சியினை பின்பற்றி பக்கவாதத்தினை தடுக்கின்றனர். அதாவது இந்த பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை குறைக்கின்றது.

ஜப்பானியர்கள் தினமும் 15-20 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைப்பதுடன், இந்த செயலானது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் மற்றும் மன அழுத்தத்தினை குறைக்கின்றது.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பைக் கலந்து அதில் காலை முழங்கால் வரை ஊற வைக்க வேண்டும். இதனால் கணுக்கால் வலி குறைவதுடன், உடல் நரம்புகள் புத்துணர்வு அடைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.

அதே போன்று மது மற்று புகைப்பழக்கத்தினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தலைவலி உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் இவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக, திடீர் சமநிலை இழப்பு, மங்கலான பார்வை, முகம் ஒரு புறம் கோணலாக செல்வது. கைகளை தூக்க முடியாமல் இருப்பது, தெளிவற்ற பேச்சு என்பதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா