Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?
[Thursday 2026-02-12 16:00]

தொப்பையினை மிகவும் சுலபமான முறையில் குறைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. வேகமாக அதிகரித்துவிடும் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது. அதிலும் தொப்பை கொழுப்பு அதிகமாகிவிட்டால் அதை எளிதில் கரைக்க முடிவதில்லை. ஆதலால் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி நிலையம் செல்வது, உணவில் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

நாம் சாப்பிடும் உணவுகள் தான் உடல் எடை மற்றும் தொப்பையை அதிகரிக்கின்றது. அதாவது கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் உணவில் அதிக கவனம் எடுப்பதுடன், கார்போஹைட்ரேட் உணவினையும் தவிர்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கிக் கொண்டால் உடல் எடையைக் குறைத்துவிடலாம். அதாவது நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கொழுப்பு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும். உணவில் நாம் உட்கொள்ளும் கொழுப்பானது வயிற்று பகுதியில் தங்கிவிடுகின்றது.

இரவில் குறைவான அளவு சாப்பிட வேண்டும். இரவு தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு உணவு உண்பதை நிறுத்திக் கொள்ளவும்.

ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செல்வதற்கு வாய்ப்பு இல்லையெனில் வீட்டிலேயே சின்ன உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

படிக்கட்டு, வீடு இவற்றினை சுத்தம் செய்யும் வேலையினையும் செய்வது போன்றவை உடலுக்கு மிகவும் நல்லதாகும்.

இரவில் தூக்கம் மிகவும் அவசியம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்கள் தொப்பை கொழுப்பினால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நார்ச்சத்து, இரும்பு சத்து, புரோட்டீன் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.சமையலுக்கு தேவையான எண்ணெய்யை கடைகளில் வாங்காமல், கொழுப்பு இல்லாத ஆலிவ் மற்றும் கடுகு எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தவும்.

அதிகமான தண்ணீர் பருகுவது, டீ, காபி இவற்றினை முற்றிலும் குறைப்பதும், சர்க்கரையை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா