Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கோதுமை மாவு ரொட்டிகள் உடலுக்கு நல்லதா?
[Friday 2026-02-13 15:00]

நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் கோதுமை மாவு ரொட்டிகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உண்மையில் எவ்வளவு நல்லது என்பதை குடல் நிபுணர் விளக்கி உள்ளார். பொதுவாக நாம் இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் ஷப்பாத்தி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவோம். இது சிலர் டயடில் இருப்பதற்கும் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் நாம் அடிக்கடி கோதுமை மாவில் செய்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்குமா என்பது பலரும் அறியாத விடயம்.

இந்த ஷப்பாத்தி ரொட்டி போன்றவற்றை யார் எவ்வளவு எப்போது சாப்பிட வேண்டும் என்பதை குடல் நிபுணர் விளக்கத்துடன் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சுபம் வத்ஸ்யா சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் இந்த விடயம் பற்றி பேசி உள்ளார். அவர் ரொட்டி ஷப்பாத்தி சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை பற்றி கூறி உள்ளார்.

அவர் கூறிய அந்த வீடியோவில் “கோதுமை ரொட்டிகள் ஷப்பாத்திகளை மட்டுமே சாப்பிட்டுகொண்டு இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தில் ரத்த சக்கரையின் அளவை அதிகரிக்கும் என கூறுகின்றார்.

கோதுமை ரொட்டிகளை சாப்பிடுவதற்கு பதில் தினை, சோளம் அல்லது பிற மாவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டிகளை சாப்பிடுவது நல்லது என கூறி உள்ளார்.

மேலும் கோதுமை ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட் என்றும், நீண்ட, சிக்கலான சிக்கலான சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனது என்றும் டாக்டர் வத்ஸ்யா விளக்கினார்.

இப்படி அதிக கார்போஹைட்ரேட்டுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு மெதுவாக உயரும் என அவர் கூறி உள்ளார்.

கோதுமை ரொட்டிக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்? நீரிழிவு நோய் இருந்தால் அவர்கள் கோதுமை சாப்பிடாமல் சோளம் சாப்பிட்டால் மிகவும் நன்மை தரும்.

கோதுமை இன்சுலின் அளவை அதிகரிக்கிறது, எனவே சோளம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. புரதச்சத்து தேவைப்படுபவர்கள் தினை ரொட்டியை சாப்பிடலாம்.

உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ராகி ரொட்டி உங்களுக்கு நல்லது. இப்படி கோதுமை மாவில் இருந்து தயாரிக்கட்ட உணவை விட இந்த ஒற்றை தானிய உணவுகள் நன்மை தரும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா