Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சளி, இருமலுக்கு உடனே முடிவு கட்டும் தூதுவளை!
[Monday 2026-02-16 15:00]

பொதுவாகவே மூலிகைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு நிச்சயம் தூதுவளையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமல் ஏற்பட்டு வாட்டி எடுக்கும். உடல் வலிமையாக இருப்பவர்களுமே சளி, காய்ச்சல் ஏற்படும் போது குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள். சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதில் தூதுவளை சிறந்த மூலிகையாக அறியப்படுகின்றது.

குறிப்பாக, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. இது சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவற்றை சரி செய்வதில் உடனடி ஆற்றல் காட்டும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சளியை குணப்படுத்த தூதுவளையைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் அல்லது , ரசம் செய்து பருகலாம். இது தவிர, சூப், சட்னி, துவையல் போன்ற பல்வேறு ரெசிபி வகைகளில் தூதுவளையைப் பயன்படுத்தலாம்.

தூதுவளைச் சாறு வீக்கத்திற்கு எதிரான குணங்களைக் கொண்டுள்ளது. எனவே உடலில் வீக்கம் ஏற்படும் போது தூதுவளையில் சூப் அல்லது ரசம் வைத்து அடிக்கடி சாப்பிடலாம். இவ்வாறு தூதுவளையை உட்கொள்ளும் போது, அது அந்த வீக்கத்தைக் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை மிகவும் முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது.மேலும் நினைவாற்றலை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தூதுவளையை உட்கொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். தூதுவளை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

அந்தவயைில், சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், ஏரைாளமான மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை மூலிகையான தூதுவளையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல், சிறுவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ரசம் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புளி - நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

பொடி செய்வதற்கு

சீரகம் - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 1

மல்லி - 1 மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 7 பல்

தூதுவளை இலை - 1 கைப்பிடியளவு

நெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 2

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகையளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து ஊற வைத்துக் சாறு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர் புளி கரைசலுடன் தக்காளியையும் அரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனையத்து சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் தூதுவளை இலையை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, புளிச்சாற்றுடன் அரைத்த கலவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான் சளி இருமலுக்கு அருமருந்தாகும் தூதுவளை ரசம் ரெடி.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா