Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெயில் காலங்களில் மண்பானை தண்ணீர் ஏன் சிறந்தது?
[Tuesday 2026-02-17 16:00]

மண்பானை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மண்பானை எனப்படுவது, களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரம் ஆகும். இதில் சமையல் செய்வது, தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது என்பதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவை உடல் ஆரோக்கியத்தினை வலுப்படுத்துகின்றது. இந்த பானையில் தண்ணீர் சேமித்து குடித்து வர பல ஆரோக்கிய நன்மையினை பெற முடியும். மண்பானைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால் இயற்கை முறையில் தண்ணீர் குளிர்விக்கப்படுகின்றது.

ரெப்ரிஜிரேட்டர் போன்ற சாதனங்களில் ரசாயனங்களின் உதவியுடன் குளிர்விக்கப்படும் என்பதால் குறித்த தண்ணீர் உடம்பிற்கு கேடு விளைவிக்கக்கூடும்.

களிமண்கள் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டதாக இருப்பதால், சேமித்து வைக்கப்படும் தண்ணீரின் pH அளவு சமநிலைப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றது.

மண்பானையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் இயற்கை தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே, தினம் மண் பானை தண்ணீர் குடிப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.

மண் பானை தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை தாதுக்கள், நம் உடலில் ஏற்படும் காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கு அதிகமாக உதவுகின்றது. அதுமட்டுமின்றி காயங்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் இவை தடுக்கின்றது.

வெயில் போன்ற உஷ்ண காலங்களில் மண்பானை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதிலுள்ள இயற்கை தாதுக்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல், கண் எரிச்சல், வாய்ப்புண் போன்ற பிரச்சனையை தடுக்கவும் செய்கின்றது.

ரெபிரிஜிரேட்டரில் சாதனங்களில் குளிர்விக்கப்படும் தண்ணீரை குடிக்கும் பொழுது தொண்டை பகுதியில் எரிச்சல் போன்ற உபாதை ஏற்படுகின்றது. ஆனால் மண்பானை தண்ணீரை பருகினால் இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

மண் பானைகள் தண்ணீரை குளிர்விப்பதோடு மட்டும் அல்லாமல், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்கின்றது. தண்ணீரில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு, நுண்ணுயிர் கிரிமிகளை எதிர்த்து போராடுவதிலும் உதவுகிறது.

மண் பானையில் வைப்படும் தண்ணீரில் இயற்கை தாதுக்களை தவிர, ரசாயனங்கள் ஏதும் இல்லை. இதன் காரணமாக மண் பானை தண்ணீர் நம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா