Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா?
[Sunday 2026-02-22 18:00]

கல்லீரலை பாதுகாக்க சில மீன்வகை,உணவுவகை இருக்கின்றன. அவை என்னவென்பதை பார்க்கலாம். நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரலால் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட வேலைகள் செய்யப்படுகின்றன.

இது தவிர இந்த உறுப்பு இரத்தத்தை வடிகட்டுவது, மெட்டபாலிசத்தை பராமரிப்பது, பித்தநீரை உற்பத்தி செய்வது, இரத்த உறைதலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வது, வைட்டமின்களை சேமிப்பது போன்றவற்றை செய்கின்றன.

இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த இந்த கல்லீரலை நாம் ஆராக்கியமாக பார்த்துகொள்ள வேண்டியது நமது கடமை. எனவே இந்த பதிவில் கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

காபி விரும்பிகள் அதிகமாக காபி குடிப்பதை பார்த்து நாம் அது ஆரோக்கியம் இல்லை என கூறுவதுண்டு. ஆனால் காபியில் அதிகளவான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் பினாக் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருந்தால் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேராது. இது உடலில் ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனையை குறைக்க உதவும்.

சால்மன், மத்தி மீன்கள் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். இந்த பதார்த்தங்கள் அழட்ஜியை குறைக்க உதவும்.

மேலும் இந்த மீன்களைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, ஃபேட்டி லிவர் (Fatty Liver) பாதிப்பு வராமல் பாதுகாக்கிறது. இதனால் வாழும் நாட்களில் கல்லீரலை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.

கீரைகளில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. இவை கல்லீரலை பாதுகாப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

மேலும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். மேலும் கீரைகளில் உள்ள குளோரோபில், ரத்தத்தில் உள்ள கன உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் நச்சுகளை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது.

இது கல்லீரலின் நச்சு நீக்கும் (Detox) சுமையை வெகுவாகக் குறைத்து அதனை பாதுகாக்கும்.

பருப்பு வகைகள் நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்தவை. இதனால் அவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பருப்பு வகைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதால், ஃபேட்டி லிவர் பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

நமது கல்லீரலை உள்ளிருந்து சுத்தப்படுத்தும் வேலையும் இந்த பருப்பு வகைகள் செய்யும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா