Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி: வீட்டிலேயே செய்வது எப்படி?
[Monday 2026-02-23 16:00]

ரமலான் நோன்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பின் போது வழங்கப்படும் நோன்பு கஞ்சி பாய் வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ரமலான் நோன்பு கடந்த 19ம் தேதியில் தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பவர்கள் மாலை நேரத்தில் சத்தான உணவான நோன்பு கஞ்சியை சாப்பிட்டு திறப்பார்கள். இந்த நோன்பு கஞ்சியானது மதத்தை தாண்டி அனைத்து மக்களுக்கு மிகவும் இஷ்டமான உணவாகும். பாய் வீட்டு பிரியாணி என்றாலே தனி ருசி தான். அதே போன்று பாய் ஸ்டைல் நோன்பு கஞ்சியை விருப்பாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தனித்துவமான மணம், சுவை, சத்துக்கள் நிறைந்த நோன்பு கஞ்சியை எவ்வாறு வீட்டில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி-1/2 கிலோ

பாசிப்பருப்பு-100 கிராம்

தேங்காய்ப்பால்-அரை மூடி

கடலை எண்ணெய் - 100 கிராம்

வெந்தயம் - 15 கிராம்

பட்டை - சிறிதளவு

ஏலக்காய் - 2

கிராம்பு - சிறிதளவு

பெரிய மற்றும் சிறிய வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 5

கேரட் - 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

கறி மசாலா - 15 கிராம்

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

புதினா - 50 கிராம்

முதலில் அகலமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கடலெண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் வெந்தயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் பெரிய மற்றும் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு, கேரட், தக்காளி, கறி மசாலா, உப்பு, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அரைக்கிலோ அரிசிக்கு 10 லிட்டர் தண்ணீர் தேவையாம்.

முதலில் 7 லிட்டர் தண்ணீரை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டுமாம். மசாலா கொதித்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த பச்சரிசி, பாசிபருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அடி பிடித்துவிடாமல் இருப்பதற்கு அவ்வப்போது மீதமுள்ள தண்ணீரையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும். சுமார் ஒரு மணி நேரம் வெந்த பின்பு இறுதியாக தேங்காய்பால், மல்லி இலை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கொதிக்கவிட்டால் போதும். அட்டகாசமான மணத்துடன் பாய் ஸ்டைலில் நோன்பு கஞ்சி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா