Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கர்நாடகாவின் கெம்பு சட்னி!
[Monday 2026-03-02 16:00]

இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான ஒரு காரசாரமான கெம்பு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். வீட்டில் இட்லி தோசைக்கு எப்போதும் சாம்பார் தான் வைப்போம். அதற்கு சைட் டிஷ் ஆக சட்னி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். எப்போதும் வீட்டில் தேங்காய் சட்னி தக்காளி சட்னி என செய்து சாப்பிட்டு போர் அடித்து இருக்கும். அதற்கு தான் இந்த பதிவில் கெம்பு சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு வரமிளகாய் இருந்தால் போதும். கர்நாடகா ஸ்டைலில் சுவையாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

10 வர மிளகாய்

1பெரிய வெங்காயம், நறுக்கியது

2 டீஸ்பூன்வெல்லம்

1 டீஸ்பூன்புளி சாறு

½ டீஸ்பூன்சீரகம்

2 கொத்தமல்லி தண்டுகள் நறுக்கியது

5 பூண்டு பல்

தேவையான அளவு உப்பு

1 ஸ்பூன் எண்ணெய்

¼ டீஸ்பூன் கடுகு

1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

ஒரு சிறிய கடாயில் போதுமான தண்ணீர் சேர்த்து, 10 வர மிளகாய்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து 5 கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து, மென்மையாகும் வரை பத்து நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். - வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு மிக்ஸியில் வர மிளகாய், வறுத்த வெங்காயம், 5 பூண்டு பல், நறுக்கிய தண்டுகள் கொத்தமல்லி இலை மற்றும் தண்டுகள், ஒரு டீஸ்பூன் புளிச்சாறு, 2 டீஸ்பூன் வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

தேவையென்றால் தண்ணீர் கொஞ்சம் சேருங்கள் இது கொரகொரப்பாக சட்னியை அரைத்து தரும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் சூடானதும், ¼ தேக்கரண்டி கடுகு சேர்க்கவும்.

கடுகு வெடிக்கும் பதத்தில் கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை நிறம் மாறியதும் இதை சட்னியில் கொட்டி நன்றாக கிளறவும். கெம்பு சட்னி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா