Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மதுரை பாணியில் அசத்தல் சிக்கன் தொக்கு!
[Wednesday 2026-03-04 16:00]

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள். குறிப்பாக அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாதல் ஒரு முறை மதுரை பாணியில் சிக்கன் தொக்கு இப்படி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

மேரினேட் செய்ய தேவையானவை

சிக்கன் - 500 கிராம்

மஞ்சள் - 1/4 தே.கரண்டி

உப்பு - 1 தே.கரண்டி

அரைக்க தேவையானவை

பிரியாணி இலை 1

இலவங்கப்பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 4

ஏலக்காய் - 3

வெந்தயம் - அரை ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

அரைக்க தேவையானவை

பிரியாணி இலை - 1

இலவங்கப்பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 4

ஏலக்காய் - 3

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

தொக்கு செய்ய தேவையானவை

கடலை எண்ணெய் - 2 தே.கரண்டி

நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

நறுக்கிய தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

முதலில் சிக்கனை குளிர்ந்த தண்ணீரில் 2 அல்லது 3 முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி வைக்க வேண்டும்.

பின்னர் அரைக்க தேவையான பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, கொரகொரப்பான பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அரைத்த பொடியைச் சேர்த்து, வாசனை வரும் வரை தாளித்து, அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு கண்ணாடி பதத்துக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்கள் பச்சை வாசனை வரும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கிய பின்னர் மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து, மசாலா பொருட்கள் கெட்டியாகும் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

குழம்பு கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும், ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் மதுரை பாணியில் சிக்கன் தொக்கு மசாலா தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா