Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி!
[Saturday 2026-03-07 15:00]

தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்து நோய்நிலைகளின் பட்டியலில் பக்கவாதம் முக்கிய இடம் வகிக்கின்றது. பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் திடீரென நிறுத்தப்படுதல் அல்லது தலைக்குள் இரத்தப்போக்கு ஏற்படும் நிலையை குறிக்கின்றது. அதாவது மூளையில் இரத்தக்குழாய் வெடித்து இரத்தம் வரும் போது மூளைக்கு செல்லும் இரத்த விநியோகத்தில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதம் (stroke) ஏற்படுகின்றது.

பக்கவாதத்தின் அறிகுறிகளைக் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம் இல்லாவிடில் இயலாமையில் ஆரம்பித்து உயிராபத்து வரையில் இது தாக்கம் செத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு பிரத்தியேகமான எளிய பயிற்சி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இரவு நேரங்களில் உடலின் ஒருபகுதி பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவது போன்றோ இருந்தால், அது பக்கவாதம் ஏற்படப் போவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலின் ஒருபக்கத்தில் பலவீனமாவது அல்லது மருத்து போவது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அதனை புறக்கணிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி குழப்பமான மனநிலை அல்லது பேசுவதில் அசௌகரியத்தை உணர்கின்றீர்கள் என்றால், அதுவும் பக்கவாதத்தின் அபாய அறிகுறியாகவே அறியப்படுகின்றது.

திடீரென்று பார்வையில் பிரச்சனை ஏற்படுவது, மங்கலான பார்வை, பொருட்கள் அல்லது நபர்கள் இரண்டு இரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அது பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாகும்.

மேலும் அடிக்கடி தலைச்சுற்றலையோ அல்லது தடுமாற்றத்தையோ உணர்ந்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும்.

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியார்கள் தினமும் 15-20 நிமிடங்களுக்கு தங்களின் பாதங்களை வெந்நீரில் ஊறவைக்கும் சிகிச்சை முறையை பின்பற்றுகின்றார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, வெந்நீர் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் துணைப்புரியும். இது உடல் வலி மற்றும் மன அழுத்தத்தையும் குறைப்பதாக குறிப்பிடப்படுகின்றது. அப்படி பயன்படுத்தும் வெந்நீரில் எப்சம் உப்பு சேர்ப்பது தசைகளை தளர்த்தி, நல்ல உறக்கத்திற்கு துணைப்புரியும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா