Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி!
[Wednesday 2026-03-11 16:00]

பொதுவாகவே பூரி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குதே பிடிக்கும். இது எண்ணெய் பொரிக்கப்படுவதால் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அடிக்கடி பூரி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படும் என்றும் இதய நோய்கள் மற்றும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினைக்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் தான் முக்கிய காரணம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பூரியும் சாப்பிட வேண்டும் எண்ணெய் உணவால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடாது என்றால் எப்படி என்று தானே யோசிக்கின்றீர்கள்? எண்ணெய் துளியும் பயன்படுத்தாமலேயே பூரி செய்ய முடியும் என்றால் நம்பமுடிகின்றதா?

முடியும்! எண்ணெய் இல்லாமலேயே வழக்கமான பூரியை போன்ற அதே சுவையில் தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு பூரி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் பூரிக்கு வழக்கம் போல, மாவை பிசைந்து சிறிது நேரம் ஊரவிட்டக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மாவு மென்மையாக மாறியதும், அதனை சிறிய உருண்டைகளாக செய்து உருட்டிக்கொள்ள வேண்டும்.

பூரிக்கு எப்படி வட்டமாக திரட்டுவோமோ அதே போல திரட்டிக்கொள்ள வேண்டும். பின்பு, இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் இட்லி வேக வைப்பது போல தண்ணீர் நிரப்பி, கடைசி மேல் அடுக்கில் திரட்டிய பூரி மாவை வைத்து, மூடி, 7-8 நிமிடங்களுக்கு பூரியை வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு தீரும் வரை ஆரவிட்டு Air Fryer-ல் வைக்க வேண்டும். பின்னர் அதை மூடி, சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 30 வினாடிகள் வைக்க வேண்டும். பின்னர் எடுத்தால் எண்ணெயில் பொரித்தது போன்றே உப்பிய அசத்தல் பூரி தயார்.டயட்டில் இருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா