Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?
[Thursday 2026-03-12 17:00]

மீன் குழம்பை பல நாட்கள் வைத்து சாப்பிடுபவர்கள் இருப்பார்கள். ஆனால் மீன்குழம்பு பல நாட்கள் வைத்து சாப்பிடுவது சரியா என்பதை பார்க்கலாம். பலருக்கும் கடல் உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மீனை பிடிக்காதவர்கள் யார் இருக்க போகிறார்கள். சிலர் மின் குழம்பு வைத்தால் அதிகமாக சாப்பிடுவார்கள். பொதுவாக எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது மீன் குழம்பை ஒரு நாளுக்கு வைத்திருந்து அதை அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது. இப்படி சாப்பிட்டால் மீன் குழம்பின் சுவை அதிகரிக்கும்.

ஒரு சிலர் மீன் குழம்பை 4,5 நாட்கள் வைத்து சூடாக்கி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இது சரியான முறையா? அவ்வாறு சாப்பிடலாமா? என்பதெல்லாம் பற்றி பதிவில் பார்க்கலாம்.

மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. மீன் குழம்பு அறை வெப்பநிலையில் கெட்டுவிடும். இதனால் தான் சமைத்த பின்னர் ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

இது குழம்பை பாதுகாப்பதுடன் மீனில் கெட்ட மணம் வராது. ஆனால் மிக முக்கியமான விடயம் ஃப்ரிட்ஜில் மீன் குழம்பை வைக்கிறீர்கள் என்றால் அந்த கறி சூடாக இருக்க கூடாது.

ஃப்ரிட்ஜில் மீன் குழம்பு வைக்க முதல் அது நன்றாக ஆறி இருக்க வேண்டும். பின்னர் அதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு நன்றாக இறுக்கி மூடி அதன் பின்னர் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.

ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட மீன் குழம்பை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம் அது உடலுக்கு தீங்கு விளைவிக்காது. நீங்கள் எப்போதெல்லாம் ஃப்ரிட்ஜில் இருந்து கறியை வெளியே எடுக்கிறீர்களோ அதை சூடாக்கி அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும் பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

குழம்பை கூடுபடுத்தி பின்னர் முதலில் மீன் கெட்டுப்போய் இருக்கிறதா என்பதை சோதித்து விட்டு சாப்பிடுவது நல்லது. இல்லை என்றால் உடல் உபாதைகள் வரும்.

ஒரு வேளை மூன்று நாட்கள் கடந்து விட்டதும் வித்தியாசமான சுவை வந்தால் அந்த கறியை சாப்பிட கூடாது. மீன் கறியை திரும்ப திரும்ப சூடுபடுத்தினால் அதன் சுவை, சத்துக்கள் குறையக்கூடும் எனவே ஒருமுறை இரண்டுமுறை சூடுபடுத்துவது நல்லது.

நீங்கள் ஃபிரிட்ஜ் மீன் கறியை வைக்கும் போது ஃபிரிட்ஜ் 4 டிகிரி செல்சியஸ் வரை தான் இருக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் மீன் குழம்பை வைத்திருக்க வேண்டும் என்றால் மசாலாக்கள், புளி, எண்ணெய் உப்பு ஆகியவை குழம்பில் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் குழம்பு கெட்டுப்போகாமல் இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா