Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்கனுமா?
[Saturday 2026-03-14 17:00]

இன்றைய காலத்தில் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் உணவு சமைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அடுப்பில்லாமல் சமைக்கும் உணவில் ஒன்றை இங்கு தெரிந்து கொள்வோம். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாறு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் எரிவாயு இல்லாமல் உணவுகளை சமைப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் கேஸ் இல்லாமல் தயாரிக்கப்படும் அவல் தயிர் சாதத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

புளிக்காத தயிர் 1 கப்

வெள்ளை அவில் 1 கப்

பச்சை மிளகாய் 1

இஞ்சி - சிறு துண்டு

கேரட் துருவல் - தேவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - கொஞ்சமாக

மாதுளம்பழம் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கருப்பு திராட்சை - சிறிதளவு

இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, இதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல், கருப்பு திராட்சை, மாதுளம் பழ முத்துகள், தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

நொடிகளில், அடுப்பே இல்லாமல் தயிர் சாதம் தயாராகிவிடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா