Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா!
[Wednesday 2026-03-18 17:00]

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் விரும்பும் ஒரு எளிமையான மற்றும் சுவையான உணவு பொருள் என்றால் அது முட்டையாகத்தான் இருக்கும். முட்டையை அவித்து, பொரித்து, ஆட்லெட் போட்டு, குழம்பு செய்து என பல வழிகளிலும் சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்தது தான். ஒரு முறை சற்று வித்தியாசமான முறையில் தொன்டை கரகரப்புக்கு இதமளிக்கும் வகையில், முட்டை மிளகு மசாலா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

முட்டை - 3

வெங்காயம் - 2

கருவேப்பிலை- சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

இஞ்சி-பூண்டு விழுது - 1/2 தே.கரண்டி

தக்காளி - 1

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

சீரக தூள் - 1/2 தே.கரண்டி

கரம் மசாலா அல்லது கறி மசாலா - 1/2 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

கொத்தமல்லி இலை- சிறிதளது (பொடியாக நறுக்கியது)

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்நிறமாக மாறியதன் பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிய பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், மிளகாய் தூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேகவிட வேண்டும்.

தொக்கு பதத்துக்கு வந்ததன் பின்னர், 3 முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து நன்றாக கலக்கி அந்த தொக்கின் மீது ஊற்றி நன்றாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் தூவி மூடி போட்டு ஒரு 3 நிமிடங்களுக்கு வேகவிட வேண்டும்.

பின்னர் பாத்திரத்தை திறந்து கரண்டியாலேயே முட்டையை துண்டுகளாக்கிவிட்டு மீண்டும் மூடி 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தொன்டைக்கு இதமான முட்டை மிளகு மசாலா தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா