Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு!
[Sunday 2026-03-22 19:00]

பாகற்காய் என்றால் கசப்பாக இருக்கும் என்பதற்காக யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் கசப்பே இல்லாமல் தொக்கு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். காய்கறிகளில் பாகற்காய் என்றால் எல்லோர் முகமும் சுழிப்பார்கள். இதில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றது. சக்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஆனால் இதன் கசப்பு தன்மை காரணமாக யாரும் இதை விரும்புவதில்லை. ஆனால் கசப்பு இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்ய முடியும். சரியான பக்குவத்தில் மசாலா அரைத்து சேர்த்து தொக்கு செய்யும் போது, சுவை நாக்கில் நிற்கும்.

இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை தயிர் சாதம், மோர்குழம்பு போன்றவற்றுடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். இது ஒரு வாரம் வரை கெட்டும் போகாது.

தேவையான பொருட்கள் {அரைப்பதற்கு}

சின்ன வெங்காயம் - 3

பூண்டு - 4 பல்

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 3/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 10

சீரகம் - 1 சிட்டிகைபெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 10 பல் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 2 (அரைத்தது)

பாவக்காய் - 1/2 கிலோ

குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

அரைத்த மசாலாதண்ணீர் - தேவைக்கேற்ப

புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)

வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, துருவிய தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது நீரில் அரைத்து வைக்கவும்.

தாளிப்பதற்கு எண்ணெய் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் பூண்டு, பொடி வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள், காஷ்மீரி மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். இதன் பின்னர் அரைத்த தக்காளி, விதைகளை நீக்கிய பாகற்காய் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும்.

இத நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா, சிறிது நீர், புளிச்சாற்று, 1 டீஸ்பூன் வெல்லம் சேர்த்து 2,3 நிமிடம் தீயை அதிகமாக வைத்து வதக்கவும்.

பின்னர் 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். அ்வ்வளவு தான் சுவையான பாகற்காய் தொக்கு தயார். இதை காற்று புகாத கண்ணாடி போத்தலில் போட்டால் ஒரு வாரம் வரை கெடாது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா