Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை குறைக்க காலை உணவாக என்ன சாப்பிடலாம்?
[Monday 2026-03-23 16:00]

உங்கள் எடை குறைப்புப் பயணத்தை ஊக்குவிக்க, புரதம் அடங்கிய சில சத்தான உணவுகளை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதே அளவு உங்கள் உணவில் கவனம் செலுத்துவதும் அவசியம். நீங்கள் உடை குறைக்கும் யோசனையில் இருந்தால் அதற்கு மிக முக்கியமாக நீங்கள் காலை உணவை செய்து சாப்பிட வேண்டும்.

இந்த பதிவில் நீங்கள் எளிதாக காலையில் செய்து சாப்பிடகூடிய அதுவும் உடல் எடையை கட்டுக்குள் வைக்ககூடிய உணவுகள் என்வென்பதை கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள்.

சீலா - புரதச்சத்து நிறைந்த சீலா உடல் எடை குறைப்பிற்கு பயனளிக்கும். இதற்கு முதலில் முளைக்கட்டிய பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும். இப்போது அதை கடலை மாவு, தயிர் மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களுடன் கலக்கவும். இந்தக் கலவையை பாத்திரத்தில் பரப்பி, சீலாவை இருபுறமும் சுடவும். இதை பச்சை சட்னி அல்லது தயிருடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பனீர் புர்ஜி - பனீரில் கணிசமான அளவு புரதச்சத்து உள்ளது. இதை செய்ய முதலில், பனீரை மசிக்கவும். மசித்த பனீர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். இப்போது இதை நீங்கள் கலோரி குறைவான உணவுடன் வைத்து சாப்பிடலாம்.

சனா சாட் - கொண்டைக்கடலையில் புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு மற்றும் மசாலாப் பொருட்களை வைக்கவும்.

இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். உங்கள் உடல் எடை குறைப்புப் பயணத்தை மேம்படுத்த விரும்பினால், இந்த உணவை உங்கள் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா