Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பெண்கள் மல்லிப்பூ ஏன் வைக்கிறார்கள் தெரியுமா?
[Tuesday 2026-03-24 16:00]

பலருக்கும் மல்லிகை பூக்களின் நறுமணம் பிடிக்கும் இதற்காக அனைவரும் இந்த பூக்களை கோர்த்து தலையில் வைத்து கொள்வார்கள். பூக்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இயற்கை தந்த அற்புதத்தில் ஒன்று தான் பூக்கள். அதிலும் மல்லிகைப்பூக்களின் மீது பெண்களுக்கு தீராத காதல் இருக்கிறது என்றே சொல்லலாம். திருமணமமாக இருந்தாலும் சரி பண்டிகையாக இருந்தாலும் சரி மல்லிகை பூக்களை ஒவ்வொருவரும் அதிகமாக எடுத்து வருவார்கள்.

இதனால் சில பெண்களுக்கு மல்லிகை பூக்களின் வாசம் ஒரு அடிக்ட் போல அதற்கு மயங்கி போகின்றனர். இதன் காரணத்தினால் தான் தமிழ் சம்பிரதாயப்படி முதலிரவின்போது தலையில் மல்லிகை பூக்கள் வைத்து உள்ளே செல்வார்கள். இதற்கு பின்னால் அறிவியல் காரணம் உண்டு.

தற்போது கோடை காலம் ஆகையால் மல்லிகை பூக்கள் ஏராளமாக பூத்துக்குலுங்கும். எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக ஒரு மல்லிகை செடி இருந்தே தீரும்.

சிலர் மாலையில் இந்த மல்லிகை பூக்களை பறித்து அதை கோர்த்து தங்கள் தலையில் வைத்துக்கொள்வார்கள். இது முன்னோர்களின் மூலம் வந்த பழக்கம்.

ஆனால் யாராவது மல்லிகை பூ வைப்பதற்கு என்ன காரணம் என்பதை சிந்தித்துள்ளீர்களா? இதன் பின்னர் மிகப்பெரிய அறிவியல் காரணமே உள்ளது.

மல்லிகைப்பூவின் மணம், அதை அணிந்திருப்பவருக்கும், வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், அமிக்டாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் போன்ற மூளையின் அதீத செயல்பாட்டு மையங்களை அமைதிப்படுத்துகின்றதாம்.

இதன் மூலம் நமக்கு தோன்றும் தேவையற்ற எண்ணங்களை அகற்ற இது உதவும். மனதை அமைதிப்படுத்தவும் இது உதவுகிறது. மேலும் மல்லிகைப்பூக்களில் ஜாஸ்மோன் எனப்படும் ஒரு வேதிச் சேர்மம் இருக்கிறதாம்.

இது டோபமைன் மற்றும் செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது எனப்படுகின்றது. நமக்கு மூளையிலிருந்து இந்த மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியேறினால் மன அமைதி கிடைப்பதுடன் மகிழ்ச்சியால் முகப்பொலிவு வருமாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா