Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்!
[Saturday 2026-03-28 17:00]

பொதுவாகவே விலை மதிப்பு மிக்க பொருட்களின் பட்டியலில், தங்கம்,வைரம், சொகுசு கார்கள், கடிகாரங்கள் போன்ற பொருட்கள் தான் முக்கிய இடம்பிடிக்கும். ஆனால் இந்த வரிசையில், ஒரு பழம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?ஆம் ஜப்பானில் விளையக்கூடிய 'யுபாரி கிங்' (Yubari King Melons) எனப்படும் முலாம்பழங்கள் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழமாக அறியப்படுகின்றது. அப்படி அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பது குறித்தும், விலைகுறித்தும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் மிக விலையுயர்ந்த பழமாக யுபரி முலாம்பழம் அறியப்படுகின்றது.இது ஜப்பானில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

இவை வெறும் பழங்களாக மாத்திரம் பார்க்கப்படாமல், ஜப்பானிய கலாச்சாரத்தில் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவும், ஆடம்பரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது.

அதனால் தான் இவற்றை சாதாரணமாக கடைகளில் விற்பனை செய்வதில்லை. மாறாக ஏலம் எடுப்பார்கள். ஒரு பழத்தின் விலை ரூ.20 லட்சம் வரை உள்ளது.

சுவாரஸ்யம் என்னவென்றால், இது ஒரு வகை முலாம்பழம் (Melon). அதாவது வாட்டர் மெலன் வகையை நேர்ந்தது தான். இதன் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதுதான் இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஒரு யுபரி தர்பூசணி 2019 ஏலத்தில் 5 மில்லியன் யென்களுக்கு விற்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.33 லட்சம்.

இந்த முலாம்பழங்கள் ஒரு ஆடம்பர பொருளின் விலைக்கு விற்கப்படுவதன் பின்னணியில், பல வியப்பூட்டும் உள்ளன.

குறிப்பாக இவை ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள யுபாரி என்ற குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்தப் பகுதியின் மண் எரிமலைச் சாம்பல் மற்றும் தாதுக்கள் நிறைந்தது என்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

மேலும், அங்கு நிலவும் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைக்கு இடையிலான பெரும் வித்தியாசம், இந்தப் பழத்திற்கு ஒரு தனித்துவமான நறுமணத்தையும், நாவில் தேன் சொட்டும் இனிப்பையும் கொடுக்கின்றது.

உலகின் வேறு எந்தப் பகுதியில் இதனை வளர்க்க முயன்றாலும், யுபாரியில் கிடைக்கும் அதே சுவையும் தரமும் கிடைப்பதில்லை. அதுவும் இதன் விலையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய காரணியாக இருக்கின்றது.

யுபாரி கிங் முலாம்பழங்களைப் பயிரிடும் முறை மிகவும் சவாலானது மற்றும் நுணுக்கமானது. இவை சாதாரண நிலங்களில் வளர்க்கப்படாமல், முற்றிலும் மனிதக் கட்டுப்பாட்டில் உள்ள பசுமைக்குடில்களிலேயே (Greenhouses) பயிரிடப்படுகின்றன.

விவசாயிகள் ஒவ்வொரு செடியையும் மிக உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியைத் துல்லியமாகப் பராமரிக்கின்றனர்.

ஒரு செடியின் அனைத்து சத்துக்களும் ஒரே பழத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பல நேரங்களில் ஒரு செடியில் ஒரே ஒரு முலாம்பழத்தை மட்டுமே வளர்க்கும் முறையைப் பின்பற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா