Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை குறைக்கும் ஆளி விதைகள்!
[Monday 2026-03-30 16:00]

ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flax Seeds-களில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Linum என்ற இனத்தில் Linaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பயிர் இதுவாகும், நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள், 5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய்கள் இருக்கும்.

பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடிய விதைகள், மிகவும் கடினமாகவும், மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும்.

பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.

ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கும் போது அது குழம்பாகிவிடும், அதை வடிகட்டி கண்ணில் விட்டால் கண் எரிச்சலும் கண் சிகப்பும் மாறிடும்.

ஆளி விதையில் நார்ச்சத்து மிக அதிகம், இதை சரியான அளவில் உட்கொள்ளும் போது அதிகம் பசிஎடுக்காது, இதனால் துரித உணவுகள், அடிக்கடி உணவுகளை உட்கொள்தல் போன்றவை தடுக்கப்படுகிறது, நார்ச்சத்து கெட்ட கொழுப்பு சேர்வதை தடுப்பதால் பல நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

மிக முக்கியமாக இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் தேவையற்ற கொழுப்பை எரிக்க துணைபுரிகிறது, அசைவ உணவு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு ஆளி விதை சிறந்த புரோட்டீன் மூலமாகும்.

ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு போன்றவற்றிற்கு ஆளிவிதை சிறந்த மருந்தாகும், இதிலுள்ள ஓமேகா 3 புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதால் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

ஆளி விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், இல்லையென்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

எனவே, பெரும்பாலும் ஊறவைத்தோ, அல்லது அரைத்துப் பொடியாகவோ உண்ணப்படுகிறது.

ஆளிவிதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

அல்லது இந்தப் பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஆளி விதைகள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இரைப்பை பாதையை டைத்துக் கொண்டு மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

நன்மைகளை அள்ளிக்கொடுத்தாலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, கொஞ்சம், கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் குறிப்பாக பச்சையான மற்றும் பழுக்காத ஆளி விதை உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பற்றது எனக் கருதப்படுகிறது.

ஆளி விதைகளின் ஈஸ்ட்ரோஜென் போன்ற விளைவுகளின் காரணமாக, கர்ப்ப காலம் அல்லது பால் ஊட்டும் காலங்களில், அதனை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது.

குறிப்பு- எந்தவொரு பொருளையும் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும். சுயமாக எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளை உண்டு பண்ணலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா