Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்?
[Sunday 2026-04-05 18:00]

நாம் தொடர்ந்து 30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடவதை நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பதிவில் பார்க்கலாம். இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் அதிக அளவில் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். காலையில் தேநீர் மற்றும் காபி குடிப்பது முதல் இரவில் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது வரை நமது வாழ்க்கை முறை சக்கரையில் மூழ்சி உள்ளது. இனிப்பு அதிகமாக சாப்பிடுவது நமக்கே தெரியாமல் நமது உடலில் பல நோய்களுக்கு உள்ளாக செய்யும்.

மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் ஒருவர் வெறும் 30 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்த்தால் அவரது உடலில் பல மாற்றங்கள் இடம்பெறும் எனப்படுகின்றது. அதை விரிவாக பார்க்கலாம்.

சோர்வு குறைதல்

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் ​​உங்கள் உடலின் ஆற்றல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும். சக்கரை சிறுத்திய சில நாட்கள் உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கும். இது ஒரு வாரத்திற்குப் பின்னர் உங்கள் உடல் அதற்குப் பழகத் தொடங்கும். இதன் பின்னர் உடலில் சக்கரை அளவு சமநிலைப்பட்டு உடல் ஆற்றலுடன் இருக்கும்.

எடை கட்டுப்பாடு

எப்போதும் சர்க்கரையைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. நீங்கள் அதிகமாக கலோரிகளை சாப்பிட மாட்டீர்கள். இது படிப்படியான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக சொல்லப்போனால் இது உங்கள் தொப்பை கொழுப்பை கரைக்கும்.

சருமம் தெளிவடைகிறது

அதிகப்படியான சர்க்கரை சருமத்தை பொலிவிழக்கச் செய்கிறது. உணவில் சர்க்கரையைச் சேர்ப்பது முகப்பரு மற்றும் முதுமைக்கு வழிவகுக்கும். நீங்கள் சர்க்கரையைத் தவிர்க்கும்போது, ​​உங்கள் சருமம் பொலிவடையத் தொடங்கும், முகப்பருக்கள் குறையக்கூடும், மேலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம்

சக்கரை கட்டுப்பாடு இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதிக அளவில் சக்கரை சாப்பிட்டால் கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே மருத்துவர்களின் பரிந்துரைப்படி 30 நாட்களுக்கு சர்க்கரையைத் தவிர்ப்பது, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மன ஆரோக்கியம்

சர்க்கரை மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சர்க்கரை மனநிலை மாற்றங்களையும் பதட்டத்தையும் அதிகரிக்கக்கூடும். இதனால் ​​படிப்படியாக மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். தூக்கத்தின் தரமும் மேம்படும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த வழிவகுக்கும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு நபர் சக்கரையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முழுமையாக கட்டுப்படுத்த கூடாது. நாளொன்றிற்கு இரண்டு தடவை காபி அல்லது டீயில் மட்டும் சக்கரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டு அதனுடன் சமச்சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் அதிக நன்மை கிடைக்கும். 30 நாட்களுக்குள் உடலில் நேர்மறையான மாற்றங்களை உணர முடியும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா