Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கோடையில் அரிசிகஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?
[Thursday 2026-04-09 16:00]

கோடை காலத்தில் வெப்பத்தாக்கம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியம். கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கவும் அரிசிக் கஞ்சி ஒரு முக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றது. இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், புரோபயாடிக்குகளும் நிறைந்து இருப்பதால், ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

கோடைக்காலத்தில் அரிசிக் கஞ்சி அருந்துவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் அரிசிக்கஞ்சி இன்னும் பல நன்மைகளை தருகிறது. இஅதை பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அரிசி கஞ்சி, இரவு முழுவதும் புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமானத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்பட்டால் இந்த கோடை காலத்தில் அரிசிக்கஞ்சியை தினமும் அருந்துங்கள்.

அரிசி கஞ்சி மிகுந்த குளிர்ச்சித் தன்மை கொண்டது. கோடைக்காலத்தில் இதைக் குடிப்பதால், உங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக்கி, வெயில்தாக்கம் மற்றும் வெப்பத்தாக்கத்தின் பாதிப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.

அரிசியில் மாவுச்சத்து உள்ளது, மேலும் அது நொதித்தலுக்குப் பிறகு ஆற்றலின் சிறந்த ஆதாரமாக மாறுகிறது. உடல் சோர்வாக உணரும்போது ஒரு குவளை கஞ்சி அருந்துவது உங்கள் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடக்கும் இதனால் நீங்கள் கோடையிலும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.

நீங்கள் நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வாயுத் தொல்லையால் அவதிப்பட்டால், காலையில் வெறும் வயிற்றில் அரிசிக் கஞ்சியை உட்கொள்ளுங்கள். இது குடல் இயக்கத்தை எளிதாக்கி, வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்.

அரிசிக்கஞ்சியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைதுள்ளது. மேலும் உங்கள் கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து, இயற்கையான பொலிவை அளிப்பதோடு, கூந்தலையும் வலுப்படுத்துகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா